பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

தமிழ் நாட்டில் புத்தக வியாபாரம், தலை எழுத்து போலத்தான் நடக்கும். ஒராயிரம் புத்தகங்களைக் கூட விற்பதற்கு பல ஆண்டுகள் பரபரப்புடன் அலைந்து திரிந்திட வேண்டிய அவல நிலை தான். தமிழ்ப் புத்தகங்களைப் பொறுத்த வரை. அதுவும் தெரியும்.

பதிப்பாளர்கள் புத்தகங்களைப் போட்டு விட்டு, பதை

பதைத்துக் கொண்டு வாழ்கின்ற பரிதாபநிலையும் எனக்கு நன்றாகவே தெரியும். புரியும்.

விற்க முடியும் என்று பதிப் பிக்கின்ற நூல்கள் கூட விற்பனையாகாமல் முடங்கிக் கிடக்க, பதிப்பாளர்கள் அடங்கிப் போயிருக்கும் நிலையில், விளையாட்டுத்துறையில் நூல்கள் வந்தால், விற்பனையாகுமா? பைத்தியக்காரத்தனமாக இல்லையா? எல்லோருமே என்னைக் கேட்டனர்.

இந்தக் கேள்விக்குப் பதில் கூறுவதற்கு முன்பாக, விளையாட்டுத்துறை என்றாலே, என்ன நிலைமை அந்த நாளில் இருந்தது என்பதையும் நாம் அறிந்து கொண்டாக வேண்டும்.

விளையாட்டு என்றாலே முகம் சுளிக்கின்ற மக்கள்.

விளையாட்டு என்றாலே வீதியிலே காட்டுகின்ற வித்தைகளுக்கு சற்றும் வித்தியாசமில்லாத விநோத ஒட்ட ஆட்டங்கள் என்று விமர்சிக்கின்ற மக்கள், விலாநோக சிரிக்கின்ற மக்கள்.

விளையாட்டைப் பற்றிப் பேசினாலே, ஆங்கிலத்தில் பேசினால்தான் கெளரவம் பெருமை என்றெல்லாம் பேசப்பட்ட காலக்கட்டத்தில் தான், நான் தமிழில் எழுதுகிற என் எழுத்துப்பணியைத் தொடங்கினேன்

விளையாட்டுத் தொடர்பான கூட்டங்கள், கருத்தரங்கங்கள் நடைபெறுகிறபொழுது, விளையாட்டை அறிக்குவர்கள்