பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எளில், நவராஜ் செல்லையா

புத்தகம் எழுதத் தெரிந்தால் மட்டும் போதாது, அதனைச் சேர்ந்த எல்லா விஷயங்களையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் முக்கியமான விஷயம்.

புலியிடம் தப்பி, சிங்கத்திடம் சிக்கியவன் கதை போல, எனது முயற்சி, இன்னொரு ஆளிடம் போய் சிக்கிக் கொண்டது.

புத்தக விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று

தீர்மானித்தபோது, புத்தகக் கண்காட்சி ஒன்றில், ஒரு மனிதரை

சந்திக்க நேர்ந்தது. ஒரு புகழ் பெற்ற புத்தகக் கம்பெனியின் மேனேஜர் அவர்.

எனது புத்தகத்தைக் காட்டினேன். நல்ல புத்தகம். ஆனால் உங்களுக்குத் தயாரிக்கத் தெரியவில்லை. நான் உதவுகிறேன் என்றார்.

ஆகா, என்னே ஆண்டவரின் அருள், எதிர்பார்த்துப் போன உதவி, இப்படி எளிதாகக் கிடைத்ததே என்று மகிழ்ந்து போனேன்.

நானோநம்பிக்கையின் மீது மாளாத காதல் கொண்டவன். உதவ வந்தவர் பெயரோ நம்பி என்ன பொருத்தம்? புத்தகம் எப்படி தயாரிக்க வேண்டும் என்பது பற்றி, நிறைய எனக்கு யோசனைகள் தந்தார். பல புத்தகங்களைக் காட்டினார். தெளிவுபடுத்தினார். என்னைத் தெளியவும் வைத்தார்.

முதலில் அட்டைப் படம் பற்றிய அக்கறை வேண்டும். அட்டைப்படம் சிறப்பாக அமைந்து விட்டால், அதுவே புத்தக விற்பனைக்கு பெரிய சாதகமாக ஆகிவிடும் என்றார். நீங்களே எனக்கு உதவுங்கள் என்று கேட்டுக் கொண்டேன்.

ஒரு ஆர்டிஸ் ட்டிடம் அழைத்துப் போகிறேன் என்று ஒரு தேதியைக் கூறினார். அன்று மாம்பலம் பஸ் ஸ்டாண்டில் சந்தித்தோம்.

SAAAA SAS SSAS SSAS SSAS SSAS