பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 139

ஆர்டிஸ்ட் ஆபிஸ் ஜாம்பஜாரில் இருந்தது. 20 பைசாதான் பஸ் டிக்கெட்.

நான் பஸ்ஸில் போகும் பழக்கமில்லை. ஆட்டோவில் போவேன் அல்லது டாக்சியில் தான் போவேன். ஆட்டோவில் போகலாம் என்றார். சரி என்றேன்.

அவரது அந்தஸ்தையும், ஆடம்பர வாழ்வையும் கண்டு

அயர்ந்து போனேன். அவரது நெடிதுயர்ந்த தோற்றமும், கம்பீரமான பேச்சும் அப்படித்தான் என்னை நம்ப வைத்தது.

ஆட்டோவில் போனோம். அங்கு போய் டிபன் சாப்பிட்டோம். ஆர்டிஸ்ட் ஆபீஸ் வந்ததும், என்னை வெளியே நிற்க வைத்தார். ஏனென்று கேட்டேன்.

புதிய பதிப்பகத்து ஆட்கள் வந்தால், அந்த ஆர்டிஸ்ட் படம் போட்டுத் தரமாட்டார். நான் எனக் கென்று கேட்டு, படம் போட ஏற்பாடு செய்கிறேன் என்றார்.

நானும் ஏமாந்து போனேன். உண்மை என்று நம் பி. கொஞ்ச நேரம் கழித்து வெளியே வந்தார். ஒரு படம் வரைய 50 ரூபாய் ஆகும் என்றார். நானும் எடுத்துக் கொடுத்தேன். வாங்கிக் கொண்டு உள்ளே போனார் சிறிது நேரம் கழித்து வந்தார்.

இன்னும் இரண்டு நாளில் கிடைத்துவிடும். நானே வாங்கி வந்து விடுகிறேன். நீங்கள் ஏன்அலைய வேண்டும் என்றார். அவரது நல்ல மனதுக்கு, நல்ல பேச்சுக்காக, நன்றி தெரிவித்தேன்.

o

கடைசி வரை, அந்த ஆர்டிஸி டை காட் டாமலே, கெட்டிக்காரத்தனமாகஎன்னை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்து விட்டார். அட்டைப் பட ஓவியம் வந்தது. அந்த புத்தகம், புத்தக உலகில் நல்ல பாராட்டைப் பெற்றது. புத்தகம் தயாரிக்கின்ற முழு பொறுப்பையும் அவர் பெற்றிருந்தார்.