பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

பணம் என்னுடையது. வழிகாட்டுதல் அவருடையது, கொஞ்சம் செலவு அதிகம். அவ்வளவுதான்.

இந்த நிகழ்ச்சி நடந்து மூன்று ஆண்டுகள் கழித்து, நான் 5 புத்தகங்களுக்கு அட்டைப் பட ஓவியம் தயாரிக்க, அந்த ஆர்டிஸ்ட் அலுவலகம் நோக்கிப் போனேன்.

அவர் மட்டும் தான் இருந்தார். என்னை அன்புடன் வரவேற்றார். நீங்களும் உடலழகு பெறலாம் ‘ என்ற புத்தகத்தின் ஆசிரியர் என்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்.

‘உங்களை எனக்கு 5ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தெரியும் என்னைத்தான் உங்களுக்குத் தெரியாது’ என்றார் அந்த ஒவியர்.

ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனேன். எப்படி என்றேன் ! திகைப்புடன்.

காரைக் குடியிலிருந்து வெளிவந்த உங்கள் இரண்டு புத்தகத்திற்கு அட்டைப் படம் வரைந்ததே நான்தான். உங்களைப் பார்த்தது இல்லையே தவிர, உங்கள் பெயர் எனக்கு நன்கு அறிமுகமானதுதான் என்றார். மேலும் எனக்கு ஆச்சரியம்.

பிறகு, ஏன் நீங்கள் புதிய பதிப்பாளர்களைப் பார்ப்பதில்லை. படம் வரைந்து தருவதில்லை என்று கேட்டேன்.

உங்கள் கேள்வி எனக்குப் புரியவில்லை என்றார். என் மூன்றாவது புத்தகத்துக்கு படம் கேட்க வந்தபோது,

என்னை வெளியே நிற்க வைத்துவிட்டு உங்களிடம் நம்பி என்பவர் வந்தாரே, அவர்தான் சொன்னார் என்றேன்.

பதிப்பாளர்கள் நிறைய பேர் என்னிடம் வர வேண்டும் என்று தானே நான் காத்திருக்கிறேன். உங்களைப் போன்றவர்கள் என்னிடம் வந்தால் தானே எனக்கு வாழ்க்கை,