பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 14 i

நான் ஏன் புதுசு-பழசு என்று பதிப்பாளர்களைப் பிரிக்கப் போகிறேன் என்றார்.

இதில் என்னவோ குழப்பம் என்று நாங்கள் யோசித்தோம். இரண்டு பேருக்குமே புரியவில்லை. ஏன் அப்படிக் கூறினார்? என்னை வெளியே நிற்க வைத்தார் அவர்.

இதை மறந்துவிட்டு, இருவரும் அறிமுகம் செய்து கொண்டோம். என் வாழ்க்கை லட்சியத்தை அவரிடம் கூறினேன். நூறு புத்தகங்கள் எழுதி விட்டுத்தான் மறுவேலை என்றேன். உங்கள் லட்சத்தியத்திற்கு நான் உதவுகிறேன் என்று வாக்குறுதி தந்துவிட்டு, புத்தக வியாபாரத்தில் இருக்கும் சில நெளிவு சுளிவுகளைப் பற்றியும் கூறினார்.

நான் கொண்டு போயிருக்கும் 5 புத்தகங்களுக்கான முகப்பு அட்டை எப்படியிருக்க வேண்டும் என்று விளக்கினேன். அவரும் புரிந்து கொண்டு, ஒரு வாரத்தில் தந்து விடுகிறேன் என்றார்.

ஒரு முகப்பு அட்டைப் படத்துக்கு எவ்வளவு என்றேன். 15 ருபாய், பெரிய படமாக இருந்தால் 20 ரூபாய் என்றார்.

இப்பொழுது குழப்பம் தீர்ந்தது என்றேன்.

உங்களிடம் 15 ரூபாயைத் தந்துவிட்டு, உங்களையும் என்னையும் சந்திக்க விடாமல் , சமர்த்தாக நாடகம் ஆடியிருக்கிறார். அப்படியா அவருக்கு ஒரே ஆச்சரியம்.

ஏமாற்றியவரின் சாமர்த்தியத்தைப் பற்றி அல்ல. ஏமாந்து போன என் நம்பிக்கையைப் பற்றி.

உங்களுக்கு இப் படி ஒரு நம்பிக் கையா என்றார். ஆட்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை தந்தார்.