பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

எத்தனை நாட்கள் இந்த உலகில் இருக்கப் போகிறோம் என்று தெரியாமலேயே, நம் பிக் கையோடு நாம் வாழவில்லையா நல்லது செய்பவர்கள் என்று நம்பித்தான், ஒருவரின் உதவியை நாடுகிறோம். செய்ததற்குக் கூலி வாங்கிக் கொண்டார் என்றேன்.

நம்பி நல்ல வர்தான். அவரது ஆடம்பர செலவுக்கு, என்னைப் போல ஆட்களும் ஏமாந்த பணமும் தேவைப் படுகிறது என்றேன். அவர் சிரித்துக் கொண்டார். வேறு வழி!

இனிமேல் ஆள் மூலமாக, ஆள் அனுப்பி எந்தக் காரியத்துக்கும் முயற்சிக்கக் கூடாது. நேரே போய் நாடுவது தான் முறையான செயல் என்று ஒர் உறுதி எடுத்துக் கொண்டு, அவரிடம் விடை பெற்றுக் கொண்டு வந்தேன்.

அட்டைப் படத்திற்கு மட்டுமா அவர் அனுபவம் தந்தார்? பாடம் கற்பித்தார்? பலமுறை, பல வழிகளில் பயன்படுத்திக் கொண்டு என்னை பாடாய் படுத்தி விட்டார். என்னை ஏமாற்றி அவர் பணம் பெற்றுக் கொண்டதெல்லாம், எனக்கு நஷ்டம் ஏற்படாமல், கஷடம் மட்டும் கொடுத்ததால் தான், நான் அதிகம் கவலைப் படவில்லை.

அவர் செய்த உதவிக்காக, என்னிடம் அவர் ஒரு உதவி கேட்டார். அவர் ஒரு கதை வைத்திருந்தார். இதை நாடகமாக்கி, அரங்கேற்ற வேண்டும் என்பது அவர் ஆசை.

அவர் ஆசையை நிறைவேற்றித் தருவதாக வந்து, பல நூறு ரூபாய்களை சாப்பிட்டுவிட்டுப் போனவர்களைப் பற்றி, அவர் ஒரு சரித்திரமே கூறினார். நானும் பரிதாபப்பட்டு உதவிக்கு வந்தேன்.

கதையை அவருடைய பெயரில் போட்டு, வசனம், பாடல்கள், டைரக் ஷன், தயாரிப்பு என்று நான்