பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 147

கொஞ்சங் கொஞ்சமாக அந்தப் பெண்ணின் பேய்க் குணங்கள் வெளிப்பட்டன. வீட்டைக் காலி செய்யச் சொல்லிப் பார்த்தேன். நகர்வதாக இல்லை.

என்னையே அந்த வீட்டை விட்டு விரட்டுவதற்கு கணவன் மனைவி இருவரும் திட்டம் போட்டார்கள். சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார்கள். அது எனக்குத் தெரியாமல் போயிற்று.

இதற் கிடையில் 6 மாதங்கள் ஒடிவிட்டன. சகித்துக் கொண்டேன். வேறு வழில் லாமல் 6 மாதம் வீட்டுக்கு வாடகையும் தரவில்லை, கரண்ட் பில்லும் கொடுக்கவில்லை.

முதல் வேளையாக கரண்ட் கனெக்ஷனை துண்டித்து விட்டேன். அந்தப் பெண் பத்ரகாளி ஆகிவிட்டாள். சேரி வசனங்கள் அவள் வாயிலே சிம்மக் குரலாகத் தெறித்தன.

அப்போது இரவு 7 மணி. என் வீட்டு வாசலிலே. 20 பேர்களுக்கு மேல், உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கே சகிக்காமல், என்ன சார் இது? இந்தப் பொம்பளை இப் படி பேசுறாங்களே என்று காதுகளை பொத்திக் கொண்டனர்.

ஏன் இப்படி கத்துகிறாய் என்று கேட்கப் போன என்னை நெஞ்சில் கையை வைத்து, நெட்டித் தள்ளினாள் மறுமுறை என்னைத் தள்ள வந்தபோது. தடுத்து நான்தள்ளியதும், உடனே மல்லாந்து விழுந்து கொண்டு, புலம்ப ஆரம்பித்தாள்.

ஐயோ! என்னைக் கற்பழித்து விட்டானே என்று கதறல். அதற்குள் போட்ட சத்தத்தைக் கேட்டு, அக்கம் பக்கத்திலுள்ள குடிசைவாசிகளில் பல பெண்கள் ஓடி வந்தனர்.

என்னைக் கற்பழித்து விட்டான். நான் முடியாது என்று முரண்டு பண்ணினேன். என்ஜாக்கெட்டைக் கிழித்து விட்டான். என் பிள்ளை என்காலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.