பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 13

ஆங்கிலம் தெரியாத காரணத்தால், தமிழ் மட்டுமே பேசத் தெரியும் என்கிற ஒரே காரணத்தால், வெளியே பேச வெட்கப்பட்டுக் கொண்டு, ஆமையாக, ஊமையாக விளையாட்டில் கெட்டிக்காரர்கள் எல்லாம் அடங்கிக் கிடந்த காலக் கட்டத்தில் தான், நான் என் விளையாட்டுத் தமிழ்

இலக்கியப் பணியைத் தொடங்கினேன்.

விளையாட்டு பற்றி நான் தமிழில் எழுத முயற்சிக்கிறேன் என்று கேள்விப்பட்ட உடன், என்னுடன் பணியாற்றிய கல்லூரி ஆசிரியர்கள் கூட என்னைக் கண்ட பொழுதெல்லாம்: கண்ட மாதிரி, விளையாட்டை அறியாத, அதே நேரத்தில், ஆங்கிலம் தெரிந்த காரணத்தால், மேடையிலே பேசி, மக்களிடம் மரியாதை பெற்ற, மேனா மினுக்கிகள் அதிகம்வாழ்ந்த அந்தக் காலத்தில் கலாட்டா செய்தனள் சிலர், நான் இளைஞன், வயதில் சிறியவன் என்ற காரணத்தை வைத்துக் கொண்டு, செல்லமான கெட்டவார்த்தைகளுடன், எச்சரிக்கை செய்தனர்.

நீ எங்கே உருப்படப் போகிறாய் என்று சிலர் சாபம் கொடுத்து சந்தோஷப்பட்டனர்.

ஆக, என் எழுத்தின் ஆரம்பமே, வசை மொழிகளால், வம்படி வார்த்தைகளால் களை கட்டிக் கொண்டது. சமயம் வருகிறபோது, அந்த சம்பவங்களை கோடிட்டுக் காட்டுகிறேன்.

ஒரு சிறு முன்னுரை

இந்த இலக்கிய வளர்ச்சி எப்படி தொடங்கியது? எப்படி

வளர்ந்தது என்பது தான், இந்தத் தொடரின் முக்கிய பகுதியாகும்.

என் வாழ்வோடும் தாழ்வோடும் விளை ட்டுத்துறை தமிழ் இலக்கியம் இரண்டறக் கலந்து கொண்டி ப்பதால், என்