பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

டாக்டர் எளில் நவராஜ் செல்லையா

அவனைக் தூக்கி வெளியே எறிந்து கொல்லப் பார்த்தான். நானும் கத்தவே, என்மீது கிருஷ்ணாயிலை ஊத்திக் கொளுத்தப் பார்த்தான். நல்ல வேளை, நான் கதவை சாத்திக்கொண்டேன்.

என்று அவள் புலம்பியதைக் கேட்ட, மற்ற பெண்கள், இப்படியும் செய்யலாமா என்று என்னைத் திட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

என்சைக்கிள் கடையில் பார்டனராக இருந்த பழைய ஆள், அந்த மனிதனுக்கு நெருங்கிய நண்பனாகி விட்டிருந்தான். அவனும் இந்த நாடகத்தில் முக்கிய பங்கு வகித்தான். என்னிடம் சம்பாதித்த காசு கொஞ்சம் இருந்ததல்லவா!

உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு போனார்கள. அவர்கள் கொடுத்த ரிப்போர்ட்டானது, எனக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை கிடைப்பதற்கேற்ப ஜோடிக்கப்பட்டு இருந்தது.

முன்கூட்டியே போட்ட திட்டப்படி, இவை நடந்தன. அக்கம் பக்கத்து பெண்களிடம், கடந்த மூன்று மாதமாகப் போய், என்னைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாக, சொல்லி வைத்த சூழ்ச்சியும் எனக்கு அப்போதுதான் தெரிந்தது.

மறுநாள்காலை அசோக் நகர்போலீஸ் ஸ்டேஷனுக்கு நானே போனேன். எஸ்.ஐ. இடம் விவரமாகக் கூறினேன். அதற்குள் அமைச்சரின் வீட்டிலிருந்து போன் வந்ததாகவும், என்னை லாக்கப் பில் வைக்க வேண்டும் என்பதாகவும் எஸ்.ஐ சொன்னார். அன்று முழுவதும் நான் ஸ்டேஷனில் இருக்க வைக்கப்பட்டேன்.

மேலிடத்து உத்தரவு என்று போலிஸ் என்னிடம் கூறியது. அதற்குள் சைக்கிள் கடையிலிருந்த சேது என்பவன் வந்து, ஒரு போலீஸ்காரனிடம் பணம் கொடுத்து, அந்த ஆளை அடித்துப் புரட்டி விடுங்கள் என்று சொல்லிவிட்டுப் போனதை அந்தப் போலீஸ்காரர் என்னிடம் வந்து கூறினார்.