பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி | 5 ||

20. என் மானசீக குருமார்கள்

Tெழுத்துக் துறையை என் வாழ்க்கைத் துறையாக ஏற்றுக் கொண்ட பிறகு, என் வாழ் வின் அன்றாடப் பழக்க வழக்கங்களே மாறிப் போயின. அதிலும், புதிய துறையான விளையாட்டுத்துறைக்கு புகுந்த பின்னர், முற்றிலும் மாறுபட்ட மனிதனாகவே மாறி விட்டேன்.

விளையாட்டுத்துறையில் தமிழ்நூல்கள் இல்லை என்ற குறை. ஆங்கிலப் புத்தகங்களை வாங்கிப் படிக்கலாம் என்றால், எண்ணிப்பார்க்க முடியாத, வாங்கமுடியாத விலை இரவல் வாங்கியாவது படிக்கலாம் என்றால் யாரிடம் கிடைக்கும் என்று தேடி அலைகிற சூழ்நிலை.

யாராவது தெரிந்தவர்களிடத்தில் புத்தகங்கள் வாங்கிப் படித்ததாக எனக்கு நினைவு இல்லை. நூலகங்களே எனக்கு உறவாக, உயிராக விளங்கின.

புத்தகங்களைக் குறித்த நாட்களுக்குள் திருப்பித் தந்துவிடவேண்டுமென்று கட்டாயத்தால், இரவு பகலாகப் படிப்பு. எந்த நேரத்திலும் எழுதியே ஆக வேண்டும் என்ற துடிப்பு. புரியாத நேரத்திலும், படித்தே தீரவேண்டும் என்ற குறுகுறுப்பு.

இதற் கிடையே தெரிந்த பல ஆங்கிலக் கலைச் சொற்களுக்கு, தமிழில் புது சொற்களைக் கண்டு பிடித்தேயாக