பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|

-

-

-

டாக்டர் எளில் நவராஜ் செல்லையா

என்னிடம் அவர் கூறினார்.

பாரதி யார் திருவல் லிக் கேனியில் தங் கி யிருந்த போது, தனது கவிதைகளை சிறு சிறு நூலாக பதிப் பித்து, வெற்றிலை பாக்கு கடைகளில் விற்பதற்குக் கொடுத்திருப்பாராம்.

காலையிலே எழுந்ததும், சில நண்பர்களுடன் நடந்தபடி, விற்கக் கொடுத் திருக்கும் கடைகளுக்குப் போய், புத்தகம் விற்றதா என்று கேட்பாராம், இல்லை என்றே பதில் வருமாம்.

பிறகு, வழக்கமாக ஓரிடத்திற்கு வந்து சேர்ந்த பிறகு, அங்கு டீக்கடை வைத்திருப்பவரிடம் போய், பாய்! நாலு டீ கொடு. நாளைக்குக் காக தருகிறேன் என்பாராம்.

டீ குடித்துக் கொண்டிருக்கும் பொழுதே, அவர் தன்னைச் சுற்றியுள்ள நண்பர்களைப் பார்த்து, ஆவேசமாகப் பேசுவாராம்.

என் புத்தகத்தை எவனும் வாங்க மாட்டேன் என்கிறான், ஆனால் பாருங்கள். ஒரு நாளைக் கு, என் புத்தகங்கள் ஒவ்வொருத்தன் கையிலும் இருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் என்பாராம்.

அந்த அற்புதமான அவரின் கனவு, உயிரோடு வாழ்ந்த அவர் காலத் தில் நடக்கவில்லை. ஆனால், அந்தத் தீர்க்கதரிசியின் பேச்சு, உண்மையாயிற்று. இன்று பாரதியைப் பற்றி பேசாத ஆளே இல்லை. புத்தகம் இல்லாத வீடேஇல்லை.

இப் படி அந்தப் பெரியவர் பேசியபேச்சு, என்னை மெய்மறக்கச் செய்து விட்டது. உள்மனதை உசுப்பி விட்டது. அதாவது ஒரு இலட்சிய வெறியையே ஊட்டி விட்டது. என்னை மறந்து நானும் பேசலானேன்.

பாரதி யாரின் ஆசை, அவர் வாழ்ந்த நாட்களில் நடந் தேற வில்லை ஆனால் , நான் எனது