பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - - - - - - - - H5 விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 4

வாழ் நாட்களிலேயே, ஒவ்வொருவர் கையிலும் , ஒவ வொருவர் வீட்டிலும், என் புத்தகங்கள் இருப்பதற்காக உழைப்பேன். அந்தக் காட்சியைக் கண்டுகளிப்பேன் என்று நானே எனக்குள் சூளுரைத்துக் கொண்டேன்.

இளங்கன்று பயமறியாது என்பார்கள். இளமையில் ஏற்படுகிற அறிவை, கல்லா இளமை அதாவது அனுபவம் இல்லாத, முதிர்ச்சி அடையாத இளமை என்பார்கள். எனது இலட்சியக்கனவும் இப்படித்தான் வேகப்பட்டு புறப்பட்டது.

அதனால், நான் மகாகவி பாரதியை, என் முதல் மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்டேன். நான் அவரைவிட மேலோங்கி வந்து விடவேண்டும் என்பதாக அல்ல, அவர் கூறியது போல, புத்தகங்களை விற்றுக்காட்ட வேண்டும் என்பதாகத் தான் முடிவெடுத்துக் கொண்டேன்.

அடுத்த என் குருநாதர் வள்ளலார் இராமலிங்க அடிகள்.

அவர் ஒரு அற்புதமான கவிஞர். சொல்லாட்சியில் சூரர். சந்தங்களைப் பொழிவதில் சண் டமாருதம் போன்றவர். அழகாக கருத்துக்களை, ஆணித்தரமாக கவிதைகளில் வடிப் பதில் அவருக்கு நிகர் அவரே. அருட் பெருஞ்ஜோதி, அல்லவா அவர்.

புத்தகம் எழுதத் தொடங்கியபோது, அவரது கவிதையை ஆழ்ந்து ரசித்து, தொடர்ந்து படித்து, மனப்பாடம் செய்வதிலும் முனைப்போடு இருந்தவன் நான்.

இரவு 10 மணிக்கு தொடங்கி, விடிவதற் குள்ளாக, 2000 வரிகள் கவிதையாக எழுதி முடிக்கும் எழுத்தாற்றல், அருளாற் றல் மிக்கவர் அவர், தன் கருத்துக்கள் பற்றி எழுதியிருந்தார் இப்படி.

கடை விரித்தேன் கொள்வாரில் லை என்று அதாவது