பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எளில் நவராஜ் செல்லையா

அவர் கடை விரித்து, தன் கொள்கைகளை, கருத்துக்களை விற்க முடியாமல் , வருத்தப்பட்டதாக எழுதியிருந்தார். நானும் அவரைப் போல் கடைவிரிப் பேன். ஆனால், விற்பதற்கு முயற்சிகள் எடுப் பேன். விடமாட்டேன் வெற்றி பெறும் வரை என்று எனக்குள் நானே சூளுரைத்துக் கொண்டேன்.

ஆகவே, அவரையும் என் மானசீகக் குரு நாதராக ஏற்றுக்கொண்டேன்.

இருவரையும் நான் நேரில் பார்க்கவில்லை, என்றாலும், என் நெஞ் சில் நிறைந்தவர்களாக, உணர்ச்சிகளில் கலந்தவர்களாக அவர்கள் இருந்தார்கள்.

தொடர்ந்து செயல் படுகிற போது மட்டும் அவர்கள் என்னோடு இருக்காமல், நினைவுகளிலும் கனவுகளில் கூட இன்றும் கலந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த இரு வரையும் நான் மானசீகமாக குருவாக ஏற்றுக்கொண்டேன். ஏனென்றால், என் முயற்சிக்கு ஒரு எல்லை வேண்டுமல்லவா!

அவர்கள் அளவு என்னால் உயர முடியாது என்று எனக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் ஒரு முயற்சி.

எனக் கு என் புத்தகங்களை விற்றுவிட வேண்டும் என்பதுதான் பெரிய முயற்சி. பெரும் புகழ் பெறவேண்டும், எல்லோரும் என்னைப் பாராட்ட வேண்டும், மரியாதை செலுத்த வேண்டும் என்றெல் லாம் நான் அன்றும் விரும்பியதில்லை. இன்றும் விரும்பியதில்லை. இனியும் நான் அதை விரும்பவும் மாட்டேன். எனக்கு விளையாட்டுத் துறை இலக் கி யம் வளர்க் கும் என் இலட் சியம் தான் முக்கியம். .

விளையாட்டுத்துறை பற்றிய கருத்துக்களை, மக்களுக்கு