பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 158

ஆகவேதான், என்னை விளையாட்டுப் புத்தகம் எழுதாதே என்று எல்லா பதிப்பாளர்களும் அதைரியப்படுத்தினார்கள். புத்தகங்கள் போட வேண்டாம் என்று புத்திமதி கூறினார்கள். உன் வாழ்வை வீணாக்கிக் கொள்ளாதே என்று வழிமறித்துப் பார்த்தார்கள்.

இலட்சியத்தில் ஜெயிப்பதுதான் சந்தோஷம். புகழ் என்றாலும், அந்த இலட்சியத்திற்காக முயன்று தோற்பதும் ஒரு வெற்றிதான். அதுவும் ஒரு புகழ்தான் என்ற முடிவுக்கு வந்தேன்.

இப்படிப் பட்ட எண்ணத்தை, நான் விடாப்பிடியாக இறுக்கிப் பிடித்துக் கொண்டேன். வைராக்கியத்துடன் வரிந்து கட்டிக் கொண்டு, என் வேலைகளில் மும்மராக இறங்கினேன்.

எனக்கு நானே துணை, எனக்கு இறைவனே துணை என்ற ஒர் ஒலி, என் இதயத்துக்குள்ளே எப்பொழுதும் ஒலித்துக் கொண்டேயிருக்கும். கொஞ்சம் கூட அந்த ஒலி

குறையாமல் நானும் உள்மனதிலே ஒலித்துக் கொண்டேயிருப்பேன். என்றும் உச்சரித்துக்

கொண்டேயிருப்பேன்.

இப் படித்தான் என் எழுத்துப் பயணம் மழலை நடைபோட்டுப் புறப்பட்டது.

புத்தகம் எழுதுவதற்குப் புத்தி இருக்கிறதோ இல்லையோ, புத்தகத்தை விற்பதற்கு சக்தி இருக்கவேண்டும் என்று நான் எழுத ஆரம்பித்த காலத்திலேயே அறிந்து வைத்திருந்தேன்.

புத்தகத்தைக் கொண்டுபோய் விற்பதற்கு அப்பொழுது எனக்கு சைக்கிள்தான் வாகனமாக உதவியது. சைக்கிளை மிதித்துக் கொண்டு செல்ல, சக்திவேண்டாமா!

புத்தகம் எழுதுவதற்கு, நூலகங்களுக்குப் போவது,