பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 160

வைத்துக் கொண்டேன். பாரத்திற்குப் பயந்தால் முடியுமா?

புத்தகச்சுமை எனக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. அலைச்சல், அலைச்சல், ஓயாத அலைச்சல்.

என் பள்ளியில், ஆண்டு விழா நடக்கும் போது, நான் எழுதுகிற தமிழ் நாடகத்திற்குப் பெற்றோர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைக்கும். என் நாடகத்தில் நடிக்கும் மாணவர்களில், ராம் குமார் என்ற மாணவன், என்ன்ரிடம் மிகவும் அன்பாக இருப்பான்.

ராம் குமாரின் தந்தை ஒரு பேங்கில் மேனேஜராக பணியாற்றிக்,கொண்டிருந்தபோது, அவரை சந்தித்தேன். அவர் தன் மகன் மூலமாக, என்னைப் பற்றி நிறைய தெரிந்து: கொண்டிருந் தாராம். - -

அவர் வீட்டுக்குப் போயிருந்தேன். உங்கள் முயற்சிக்கு என் பாராட்டுக்கள். என்னிடம் எதுவும் உதவி தேவையானால் நீங்கள் தைரியமாகக் கேட்கலாம் என்றார்.

அன்பாக பிறர் பேசினாலேந்ான்.அகம் உருகிப் போவேன். இப்படி தானே முன்வந்து உதவி செய்கிறேன் என்று அவர் பேசியதைக் கேட்டுத் திக்குமுக்காடிப் போனேன்.

என்னால் சைக் கிளில் அலைய முடியவில்லை. ஒரு மோட்டார் சைக்கிள் இருந்தால், நன்றாக இருக்கும் என்றேன்.

நீங்கள் எவ்வளவு ரூபாய் தவணை கட்ட முடியும் என்றார். எனக்கு சம்பளமே 200 ரூபாய் தான். ரூ 50 தான் முடியும் என்றேன்.

மோட்டார் சைக் கிளை வைத்துக் கொண்டு என்ன செய்வீர்கள்? ஜாலியாக சினிமா, பீச், என்று போகலாம் என்று தானே கேட்கின்றீர்கள் என்றார் அவர்.