பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163

டாக்டர் எளில் நவராஜ் செல்லையா

எழுதிவிட்டு, நாங்கள்தான்தமிழ் இலக்கியத்தின் தலைவர்கள், தளபதிகள், தந்தை மார்கள் என்றெல்லாம் பேசியவர்களின் மத்தியிலேதான், என் எழுத்தும் இடம் பெற்றுக் கொண்டிருந்தது.

ஒராயிரம் பேர் என் புத்தகங்களைப் படித்தாலும், ஒரமாக அவற்றைத் தூக்கி யெறிந்துவிடக் கூடாது. புத்தகத்தை தெரியாமல் படிக்கின்ற புத்தகமாகவும் இருக்கக் கூடாது. புத்தகத்தைப் படித்த பிறகு, அது பிற்காலத்திலும் பயன்படும் என்று பத்திரமாகப் பாதுகாத்து வைக்கின்ற புத்தகமாக இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில்தான், என் எழுத்து அமைந்திருந்தது.

இந்த முயற்சி எதிர்நீச்சல் முயற்சியே என்பது எனக்குத் தெரிந்துதான் இருந்தது. அவ்வளவு சீக்கிரம் புத்தகங்களை விற்கவும் முடியாது. கையிலே காசும் கிடைக்காது. கஷட ஜீவனம் தான் செய்ய வேண்டும் என்பதும் எனக்குத் தெரியும். இருந்தாலும், நான் கவலைப்படவில்லை.

இப்படியெல்லாம் சிந்தித்து சிந்தித்து, சிந்தனையை, காசுக்காக எழுதி சிதற விடாமல் கட்டிக்காத்து சிரமப்பட்டு, புத்தகங்கயுைம் தயாரித்துக் கொண்டேன்.

ஒரு நாள் ஒரு பள்ளிக்குச் சென்றேன். அந்தப் பள்ளியின் உடற் கல்வி ஆசிரியராய் பணியாற்றிய ஒருவரை சந்தித்தேன்.

நான் எழுதிய புத்தகம் இது என்று ஒரு புத்தகத்தை அவரிடம் காட்டினேன். அதைத் திருப்பித் திருப்பி முன்னும் பின்னும் பார்த்தார். என்னைப் பார்த்தார்.

அவர் முகத்தில் ஒருவித ஆச்சரியம். கொஞ்சம் மாறி ஒருவித மாச்சரியம் (பொறாமை) ஒருவிதமான ஆட்சேபம். ஒருவிதமான கேலியும் கிண்டலும்.