பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 170

அந்தப் பார்வையின் அர்த்தமானது. என் புத்தகம் தவறுகள் நிறைந்த புத்தகம். அதை எழுதிய எனக்கு, அவ்வளவு ஞானம் போதாது. அது மட்டுமல்ல, புத்தக ஆசிரியரைவிட நான் எவ்வளவு புத்திசாலி என்பதை தன்னுடன் வந்தவர்களுக்கு உணர்த்துவதுடன், ஒரே நிமிடத்தில், தன்னை அதிமேதாவி என்று காட்டிக் கொள்ளவும் கூடிய யுக்தியை அவர் கையாண்டது எனக்கு வியப்பை மட்டுமல்ல. வேதனையையும்

அளித்தது.

என்னைப் பற்றி அந்த விளையாட்டுக் குழுவினர் எப்படியெல்லாம் நினைப்பார்கள்? அவர்கள் மனதை எப்படி மாற்றுவது? அதே சமயத்தில், கோபம் கொள்ளாமல், அந்த மனிதரை எப்படி மட்டந்தட்டுவது என்று நான் யோசிப்பதற்குள், அந்த மகா புத்திசாலி, தன் சகாக்களுடன், நான்கு தப்படிகள் நடந்துவிட்டார்.

நான் திரும்ப அவர்கள் முன்புறமாக ஒடிப் போய், பயிற்சியாளரின் கைகளை கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன். அவர் திகைத்துபோய், என்ன சார் என்று கேட்டார்.

இந்த இருப்து பேர்கள் முன்னால், என் புத்தகத்தில் நிறைய தவறுகள் இருக்கின்றன என்று சொல்லிவிட்டீர்கள். உங்கள் அறிவுரைக்கு மிகவும் நன்றி. விளையாட்டு ஸ்டேடிய அறையில்தான் நான் தங்கியிருக்கிறேன். இங்கிருந்து சுமார் 50 கெஜம்தான் இருக்கிறது. நீங்கள் கூறிய அந்த கூடைப் பந்தாட்டப் புத்தகமும் என்னிடம் இப்போது இருக்கிறது.

நீங்கள் தயவு செய்து, இவர்களுடன் என்கூடவே வந்து, உங்களுக்குத் தெரிந்த, நீங்கள் கூறிய தவறுகளை படித்துக்காட்டிவிட்டால், மறுபதிப்பில், உங்கள் பெயரையும் போட்டு, தவறுகளைத் திருத்திக்கொண்டு வெளியிடுகிறேன் என்று கூறினேன். +