பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 172

23. அவமானமும் ஆக்ரோஷமும்

Tெதாவது ஒரு வேலையில் இருந்து கொண்டே, இலக்கியப் பணியைச் செய்யலாமே என்றால், அது முடியும். ஆனால் முழுமையாக ஈடுபடமுடியாது. வெற்றி பெறவும் (LD3,/.

நான் டி. வி. எஸ் குரூப் கம்பெனிகளின் விளையாட்டு அலுவலராகப் பணியாற்றியபோது, காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை என்பதாக என் அலுவல் பணிகள் இருந்தன.

எல்லா வசதிகளும் இருந்தன. ஒரு ரூபாய்க்குள்ளே காலை சிற்றுண்டி, மதிய சாப் பாடு, மாலை சிற்றுண்டி, தேவைபட்டால் இரவு சாப்பாடு என்பதாக வசதி, கை நிறைய சம்பளம், மிகவும் மரியாதைக்குரிய பதவி, எல்லாம் இருந்தும், எனக்கு மனதில் ஒரு வித நிறைவோ முழுமையோ ஏற்படவில்லை.

காரணம்? புத்தகங்கள் நிறைய எழுத வேண்டுமே என்ற நினைப்பும் குறுகுறுப்பும், சதா என்னை நெருக்கிகொண்டே இருந்தது தான். அங்கே இருந்த ஐந்து ஆண்டுகளில், 30க்கு மேற்பட்ட நூல்களை எழுதினேன் என்றால், அது இரவு முழுவதும் உட்கார்ந்து எழுதியதால்தான் என்ற நிலை.

பகல் முழுதும் அலுவலகப் பணி, இரவில் எழுத்துப் பணி. இரண்டும், பணவருவாயைக் கொடுத்தன என் லும் உடலை