பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்லதம்பி, மூவரும் பேசிக் கொண்டிருந்தோம்.

அவரை அழைத்துப்போக கார் வரவில்லை. நானும் புறப்பட்டேன். என்னைக் கொண்டுபோய், என் வீட்டில் விட்டுவிடுவீர்களா என்று திரு அகிலன் கேட்டார்.

என்னுடைய ராஜதுத் மோட்டார் சைக்கிளில் ஏறிக்கொண்டு, வருவதற்கு நீங்கள் சரி என்றால், நானும் தயார் என்றேன். அவரும் ஏற்றுக் கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறிக்கொண்டார். சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்கு முன்னால் போகிறபோது அவர் பேசிக்கொண்டு வந்ததுதான் இன்றும் எனது நினைவில் பசுமையாக இருக்கிறது.

‘தமிழ்நாட்டில் எழுத்தாளர்களுக்கு போதிய மதிப்பும் இல்லை. தேவையான வருமானமும் இல்லை. ஒரு தமிழ் எழுத்தாளனால் தமிழ்நாட்டில், வசதியாக வாழவே முடியாது. அதனால்தான் நான் இவ்வளவு புகழ்பெற்றிருந்தும் அகில இந்திய வானொலியில் போய் பணியாற்றிக் கொண்டிருக் கிறேன்’ என்றார் திரு அகிலன்.

நான் எனது டி.வி.எஸ் வேலையை விட்டு விட்டு, முழுநேர விளையாட்டுத் துறை எழுத்தாளனாக ஆகப்போகிறேன் என்றதற்கு அதுபோல விஷப்பரிட்சையில் இறங்கவேண்டாம். குறிப்பாக தமிழ் எழுத்தாளர்களால் தன்னிறைவுடன் வாழவே முடியவில்லை. நீங்களோ விளையாட்டுத்துறையில் இருக்கிறீர்கள். கொஞ்சம் யோசித்துச் செய்யுங்கள் என்றார்.

ஏற்கனவே நான் முடிவு செய்திருந்ததால், ராஜினாமா செய்துவிட்டேன். தமிழ் எழுத்தாளர்களால், தன்னிறைவுடன் வாழமுடியவில்லை என்றால், ஏன் முடியவில்லை என்ற கேள்வியை எனக்குள்ளே கேட்டுக் கொண்டேன்.

‘எழுத்தாளர்களுக்கு போதிய வருமானம் இல்லை'