பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

| 75

டாக்டர் எளில் நவராஜ் செல்லையா

ஏன் வரவில்லை எழுத்தாளர்கள் தங்களை உருக்கிக் கொண்டு எழுதித் தள்ளுகிறார்கள். உழைப்புக்கேற்ற ஊதியம் வரவில்லை. ஏனென்றால், அவர்கள் எழுதிக் கொண்டு போய், புத் தகப் பதிப்பாளர்களிடம் விற்றுவிடுகின்றார்கள். உதாரணத்திற்காக எழுதுகிறேன். ஒரு எழுத்தாளர், ஒரு புத்தகத்தை எழுத, 500 ரூபாய் வரை செலவாகிறது என்றால், அந்தப் புத்தகத்திற்கு கிடைக்கும் வருமானம் 1000 ரூபாய்தான் இருக்கும். அப்படியென்றால், எழுத்தாளரின் வாழ்க்கையில் என்ன வருமானம் கிடைக்கும்? எப்படி முன்னேற்றம் நடக்கும்?

ஆகவே, எழுத்தாளர்கள் எல்லோரும் வாழ்க்கையில் ஏற்றம் பெற வேண்டும் என்றால், புத்தகத்தைப் பதிப்பிக்கின்ற வேலையிலும் ஈடுபடவேண்டும். புத்தகம் தயாரிக்கப் பணம் வேண்டுமே!

வெறுங்கையால் முழம் போடமுடியுமா? இதனால்தான், எழுத்தாளர்கள் எல்லோரும் எழுத்தாளர்களாகவே இருந்து போனார்கள். கவிதையையும், காதலையும் எழுதிய எழுத்தாளர்களுக்கே இந்தக்கதி என்றால், விளையாட்டைப் பற்றி எழுத வந்த என் கதி என்ன ஆகும்?

அதனால்தான், என் மீது அன்பு கொண்ட அன்பர்களும் நண்பர்களும், ‘வேலையை விட்டு விடுவதுபோல முட்டாள் தனமான காரியம் எதுவுமில்லை என்று எனக் கு போதித்தார்கள், வாதித்தார்கள், என்றாலும் நான் அதில் ஜெயித் தேன். எப்படி? விதி என்னை விடவில்லையே? வேதனைப் படவேண்டும் என்பது தானே விதியின் விருப்பம் ! - 1975ம் ஆண்டு, கிட்டதட்ட 3000 ரூபாய் பெறுகின்ற வேலையிலிருந்து விலகி வந்து, முழுநேர எழுத்தாளனாகி விட்டேன். மாதம் முடிந்தால் கவரில் சம்பளம் கிடைக்கும் என்ற நிலை மாறிப்போனது. வாழ்வும் தடுமாறிப் போனது.

எப்பொழுது கைக்கு பணம் கிடைக்கும்? எப்படி