பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

இந்த வரலாற்றுப் பகுதியில் இடம் பெறுகின்றவர்களின் பெயர்களை நான் மிகவும் பெருமையுடன்தான் எழுதுகிறேன். ஒரு சிலர் எனக்கு எதிர்மாறாக நடந்தார்கள் எனறு எண்ணி, நான் கோபப்பட்டுக்குமுறிய நாட்கள் உண்டு.

அது எவ்வளவு அறியாமை என்று இப்போது புரிகிறது அவர்கள் எனக்கு எதிராக வந்ததால் தான், அவமானம் நேரிடும்படி பேசியதால் தான், என்னால் இந்த அளவுக்கு சாதிக்க முடிந்தது.

ஆகவே, அப்படிப்பட்டவர்களையெல்லாம் நன்றியுடன்

நான் நினைத்துக் கொண்டே குறிப்பிட்டு எழுதுகிறேன்.

இங்கு நான் என்று குறிப்பிடுவது, என்னைக் குறித்துக் காட்டத்தான், கர்வத்தால் தற்பெருமையுடன் அல்ல என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.