பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179

டாக்டர் எளில் நவராஜ் செல்லையா

-

வரை பாடுகின்றார்களே!

‘படித்தவன் சூதும் பாவம் பண்ணினால் ஐயோன்னு போவான் ‘ என்று பாரதி நொந்து பாடிய வரிகளைப் படியுங்கள்.

நான் எழுதி, புத்த மாக்கி, எடுத்துக் கொண்டு என் துறையில் படித்தவர்களிடம் போனால், அங்கே நடைபெற்ற நிகழ்ச்சிகள் தான், எனக்கு அவமானங்களாகஏற்பட்டன. எதிர்ப்பட்டன.

அவமானங்கள் என்றால், அவர்கள் செய்த காரியங்கள், அவர்களுக்கு அவை சரியானதுதான். எனக்கோ எதிர்மாறாக இருந்தன என்பதுதான் உண்மை.

எனது புத்தகத்தை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாரில்லை. என்னை ஒரு எழுத்தாளன் என்று ஒத்துக்கொள்ளவும் அவர்கள் மனம் சம்மதிக்க வில்லை. என் புத்தகம் என்ன பெரிய புத்தகம்? இந்தத் துறைக்குத் தேவையில்லை என்று அவர்கள் எண்ணியது எல்லாம், அவர்களைப் பொறுத்தவரை சரியானதுதான். படிப்பு வேண்டாம் என்பவர்களை பண்படுத்தப் போனால் பாதிப்பு முயற்சிப்பவருக்குத்தானே!

ஆனால் எனது நிலை என்ன என்பதுதான் அன்றைய நாளில் நான் நினைத்துக் துடித்த நிலைமையாகும்.

விளையாட்டுத் துறை யில் மற்றவர்களை விட நான் அதிகமாகப் படித்துப் பட்டம் பெற்று, சென்னைப் பல்கலைக் கழகத்தில் (Distinction) என்று சிறப்புத் தகுதிபெற்று, பாஸ் செய்து, கல்லூரியிலும் பணியாற்றியவன்.

பொதுவாகவே, இப் படிப் பட்ட தகுதிகளுக்கு, மற்றவர்கள் மரியாதை தருவது சகஜமாக நடப்பதுதான். ஆனால், நான் மற்ற உடற்கல்வித் துறையினரைவிட, சிறப்புத்