பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 182

முன்னேறியாக வேண்டும். எங்கு சென்றாலும் மற்றவர்கள் தேடிவந்து வரவேற் பு தருகின்ற தகுதியைப் பெற்றாகவேண்டும் என்று, அந்த இரவு முழுவதும், அதே சிந்தனையுடன், படுக் கையில் துங்காமல் புரண்டபடியிருந்தேன்.

அந்த மாநாட்டில், எனக்கு மாலையிட்டு பொன்னாடை போர்த்திக் கெளரவிக்க, மாநாட்டு அமைப்பாளர்கள் விடுத்த வேண்டுகோளை, நான் கடைசி வரையில் ஏற்றுக் கொள்ளவே இல்லை. நான் ஒரு எழுத்தாளன் அவ்வளவுதான். இதற்குப் போய் எதற்கு மரியாதை என்று நான் ஒதுங்கிக்கொண்டேன்.

ஆம்பூரிலே நடந்த இன்னொரு நிகழ்ச்சி என்னை மிகவும் வேகப்படுத்திவிட்டது. ஆமாம், முழுநேர எழுத்தாளனாக மட்டுமல்ல- முழுவேக எழுத்தாளனாகவே மாற்றிவிட்டது.

ஆம்பூரில் வடாற்காடு மாவட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் பயிற்சி மாநாடு ஒன்று நடந்தது. ஆம்பூர்விஸ்வநாதன் என்பவர் மாநாட்டுப் பொறுப்பாளராக இருந்தார். சென்னையில், மாநாட்டுக்குத் தேவையான காரியங்கள் சிலவற்றை, நான்கூட இருந்து செய்து கொடுத்து உதவினேன் என்பதற்காக, மாநாட்டுக்கு வரச்சொல்லி அழைப்பு விடுத்திருந்தார். நானும் முதல் நாளே சென்றுவிட்டேன்.

மறுநாள் காலையில் உடற்கல்வி ஆசிரியர்கள் எல்லாம், ஒவ்வொருவராக வந்துகொண்டிருந் தார்கள். விஸ்வநாதன் அவர்கள். வந்தவர்களை யெல்லாம் வரவேற்றுக் கொண்டிருந்தார். அவர் அருகில் நான் நின்றுகொண்டிருந்தேன்.

இரண்டு ஆசிரியர்கள் வரும் போதே பேசிக் கொண்டே வந்தார்கள். அதோ அங்கே நிற்கிறாரே அவர்தான் நவராஜ் செல்லையா என்று சொல்ல, ‘அதுதானே பார்த்தேன்.