பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

புஸ்தகத்தை விற்க வந்துவிடுவாரே , என்று கிண்டலாகப் பேசியவாறு, என்னைப் பார்த்து கேலியாக ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு போய்விட்டனர்.

என் முகம் மாறியதைப் பார்த்த விஸ்வநாதன், நீங்கள் சொல்லியது சரியாபோச்சு. நீங்கள் ஏன் மாநாட்டுக்கு வர மறுத்தீங்கங்கறதை, நானும் இப்ப தெரிஞ்சுகிட்டேன். நம்ம துறையிலே புஸ்தகம் எழுதுற தையே கேவலமா நினைக்கிறாங்க... என்றார். அவங்களை என்ன சார் செய்யறது?

நான் இங்கே புஸ்தகம் விற்க வரலியே... நீங்கள் அழைத்த அழைப் பாளராகத்தான்ே வந்திருக்கேன். நான் மத்தவங்களை கஷ்டப்படுத்தி புத்தகம் விற்கிறேன்னு தானே குற்றச்சாட்டு என்றேன்.

இப்படி நான் எங்கே போனாலும், உடற்கல்வித்துறையில் ஒர் அங்கம் என்று யாரும் பேசுவதில்லை. விளையாட்டுப் புத்தகங்கள் விற்கிற வியாபாரி என்று தான் நினைத்தார்கள். மதித்தார்கள். அப்படியே நடந்து கொண்டார்கள்.

இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, நான் எந்த மாநாட்டிலும் கலந்துகொள்வதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.

நான் புத்தகம் எழுத விரும்பியதற்குக் காரணம். நான் சார்ந்திருக்கிற விளையாட்டுத் துறைக்கு ஒரு மதிப்பையும், விளையாட்டுத்துறை ஆசிரியர்களுக்கு ஒரு மரியாதையையும், சமுதாயத்தில் ஒரு கெளரவத்தையும் உண்டாக்க வேண்டும் என்ற ஆசையில் தான்.

இதிலே என்ன குறிப்பிடத் தக்க அம்சம் என்றால், நான் எந்தத் துறையினருக்காக, புத்தகங்களை எழுதிக் குவித்தேனோ, அந்தத் துறையினர் என்னை அங்கீகரிக்கவே இல்லை. ஒரு சாதாரண எழுத்தாளன் என்று கூட ஒத்துக்