பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185

டாக்டர் எளில் நவராஜ் செல்லையா

எரிச்சலாகிவிடும், அப்போதெல்லாம் என் அறைக் கதவை, உள் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு நாள் முழுவதும் எழுத்துப் பணியில் ஆழ்ந்து போய்விடுவேன்.

மற்றவர்கள் வந்து அழைத்துப்போகிற நிலைமையை புரிந்துகொண்டால், உடம் பில் தேங்காயெண்ணையை பூசிக் கொண்டு எழுதிக் கொண்டிருப்பேன். இப்போது வர இயலாது என்பதாகக் கூறி தப்பித்துக்கொள்வேன்.

இப்படி என் எழுத்துப் பணி, அவமானங்களுக்குப் பிறகு ஏற்பட்ட ஆவேசங்களால் தான் விரைவு பெற்றது. எப்போதும் 5 அல்லது 6 தலைப்புகளில் புத்தகங்களைத் தொடங்கி வைத்திருப்பேன். எந்த தலைப்பு பிடிக்கும் என்று எனக்கே தெரியாது. எந்தத் தலைப்புப் பிடிக்கிறதோ, அந்தத் தலைப்பை தொடர்ந்து எழுதுவேன்.

எனது வேட்கைக்கு ஏற்ப விளையாட்டுத்துறை பற்றி புத்தகம் எழுதினேன். எனது வாழ்க்கைக்கு என்று எதுவும் செய்து .ெ காள்ளவில்லையே என்று நான் எண்ணுவதற்குள், பக்கத்துவிட்டு நண்பர் ஒருவர் கொடுத்த அவமானச்சூடுதான், என்னை வாழ்க்கையிலும் முன்னேறுகின்ற ஆவேசத்தை அளித்தது.