பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 17

2. நயமான ரயில் பயணம்

1960ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒருநாள்.

மதியம் 2 மணி இருக்கும்.

காரைக் குடி போகின்ற ரயில், திருச்சி ஜங்ஷன் பிளாட்பாரம் ஒன்றில் நின்று கொண்டிருக்கிறது.

உள்ளே வாருங்களேன்! என்ற ஒர் அழைப்பு, இனிய குரலாக என்னை அழைக்கிறது.

ஏறெடுத்துப் பார்க்கிறேன்.

சிரித்த முகத்தோடு ஒருவர் கை அசைத்து அழைக்கிறார். திகைப்பும் மகிழ்ச்சியும் கலந்த உணர்வுடன், ரயில் பெட்டிக்குள் ஏறுகிறேன்.

என் முகபாவத்தைப் புரிந்து கொண்ட அவர், என்னை உங்களுக்கு ஞாபகம் வரவில்லை என்று நினைக்கிறேன். இவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விடுவீர்கள் என்று நான் நினைக்க வில்லை என்று சிரித்துக் கொண்டே பேசியவர்... என்னைப் பார்த்தார்.

நீங்கள் பயப்படவேண்டாம், நானே யாரென்று சொல்லி விடுகிறேன். என் பெயர் குழந்தை நாதன், அழகப் பா கலைக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருக்கிறேன்.