பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 188

குழந்தைகள் பிரிவில் இருக்கும். அவர்கள் முழுத் தெம்புடன் சத்தம் போட்டுக் கொண்டு மெய்மறந்து விளையாடிக் கொண்டிருப்பார்கள்.

அவர்கள் மத்தியிலே ஒரு நாற் காலியைப் போட்டு அமர்ந்துகொள்வேன். ஏறத்தாழ 500 குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும் அந்த மத்தியான வேளையில், உச்சி வெயில் உக்கிரமமாக அடித்துக் கொண்டிருக்கும் அந்த இனிய நேரத்தில், அவர்கள் சத்தத்தையெல்லாம் கடந்து, நான் அமைதியாக எழுதிக் கொண்டிருப்பேன்.

எதிரிலே அவர்கள் ஒடி ஆடுகிற சத்தமும், வந்து மேலே விழுகின்ற மோதலும், என்னை எழுத்துச் சிந்தனை யிலிருந்து மாற்ற முடியாத அளவுக்கு, நான் என் உணர்வுகளுடன் நினைவுகளுடன், ஒன்றிப்போய் விடுவேன்.

உணவு வேளை முடிந்து, பிள்ளைகள் வகுப்புக்குப் போன பிறகு, யாராவது வந்து அழைக்கும்போதுதான், எழுதுவதை நிறுத்துவேன்.

இப்படி நான் எழுதப் பழகிக் கொண்டது தான். எனது எழுத்துலக முன்னேற்றத்திற்குப் பெரும் உதவியாக இருந்தது.

இன்றும் கூட, பஸ் ஸி டாண்டு, ரயில் வே நிலையம், மற்றும் பொது இடங்களில், நான் ஏதாவது ஒரு காரியத்திற்காகப் போய், காத்துக் கொண்டிருக்க நேர்ந்தால், அந்த ஆரவாரத்திற்கு இடையிலும், நான் அமைதியாக உட்கார்ந்து கொண்டு, எழுதத் தொடங்கி விடுவேன்.

வீட்டில் கூட நான் எழுதுகிற போது, வானொலிப் பெட்டியில் இருந்து, சத்தமாகப் பாட்டு கேட்பதுபோல வைத்துக்கொள்வேன். எதிரே தொலைக்காட்சிப் பெட்டியிலும் நிகழ்ச்சிகளைப் பார்த்தபடியே எழுதுவேன்.