பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 89

டாக்டர் எளில் நவராஜ் செல்லையா

இப் படி என்னை ஆரவார சூழ்நிலையில் எழுதப் பழக்கி வைத்துக் கொண்ட காரணத்தால், நான் அதிகமாக எழுதவேண்டுமானால் இப்படிப்பட்ட சூழ்நிலை அமையப் பெற்றிருக்கும் ஒரு வீடு எனக்குத் தேவைப் பட்டது.

அப்படி நான் தேடிக்கொண்டிருக்கும் போதுதான் 1975ம் ஆண்டு, தி.நகரில் உள்ள ரெங்கனாதன் தெருவில், ஒரு வீடு கிடைத்தது அலிமா கோல்டு கவரிங் என்ற கடைக்காரரின் வீடு

. [5:/

ஒரு நாளைக்கு குறைந்தது பத்தாயிரம் பேர்களுக்கு மேலே வந்து போகிற தெரு அது.

ஒரு 100 மீட்டர் தூரத் தைக் கடக்க, குறைந்தது 30 நிமிடங்களாவது ஆகும். அதாவது சராசரியாக நீங்கள் ஒரு 1000 பேர்களையாவது இடித்துக் கொண்டுதான் முன்னேறிப் போக வேண்டும்.

மாம்பலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிராக இருக்கும் ரோடு அது. அந்தத் தெருவில் முன்பகுதியெல்லாம் கடைகளாக இருக்கும் பின் பகுதியில் தான் குடியிருக்கும் வீடுகள் இருக்கும்.

ஒவ்வொரு குடியிருப்பு வீட்டிற்கும் போக ஒரு சிறு சந்தாவது வைத்திருப்பார்கள். நான் குடியிருந்த வீட்டிற்குள் போக, வழியும் கிடையாது. ஒரு சிறு சந்து போன்ற வழியும் கிடையாது.

ஏனென்றால் வீட்டுக் குப் போகின்ற வழியில், ஒரு செருப்புக் கடை வைக்கப்பட்டிருந்தது. நாமும் ஒரு களப்டமர் போலத்தான் கடைக் குள் துழைந்து, வீட்டிற்குள் போகவேண்டும்.

கடையை ஒட்டியே என் வீடு இருந்ததால் செருப்புக்