பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

ஐயா மன்னிக்கவும், தெரியாமல் இல்லை, திடீரென்று சந்திப்பு. திகைப்பினால், என்று தடுமாறினேன். ஓராண்டுக்கு மேலாகி விட்டதே... என்று அசட்டுச் சிரிப்பு சிரித்தேன்.

பரவாயில்லை என்று என்னை கையைப் பிடித்து அருகில் அமர்த்திக் கொண்டு, தான் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆரஞ்சு சுளைகளை என்னிடம் தந்தார்.

காரைக்குடி அழகப்பா கலைக்கல்லூரியில் உடற்கல்வித் துறை இயக்குநர் ஒருவர், தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, சொந்த ஊருக்கு சென்று விட்டார். அவரைத் தான் உங்களுக்கு நன்றாகத் தெரியுமே திருவாளர் ராமதாஸ் என்றார்.

தெரியும். இப்பொழுது நினைவுக்கு வருகிறது. உடற்கல் வித் துறையில் பணியாற்றுகின்ற தகுதியும் திறமையும் நிறைந்தவராயிற்றே! அவர் மாநில அளவில்

கூடைப் பந்தாட்டப் போட்டியிலே விளையாடியவராயிற்றே! அவரைப் பற்றிப் புகழ்ந்து பேசிக்கொண்டேயிருந்தேன்.

அவரைப் பற்றி இன்னும் ஒரு சிறப்புக் குறிப்பு என்றார் சிரித்துக் கொண்டே...

என்ன? என்றேன் சற்று விநோதமான ஆச்சரியத்துடன்.

உங்களைப் போல நன்றாகக் கவிதை எழுதக் கூடியவர் என்றார்.

அப்படியா என்று ஆச்சரியப்பட்ட நான். அவர் நன்றாகக் கவிதை எழுதக் கூடியவர் என்பதை ஒப்புக் கொள்கிறேன். என்னை போல என்றீர்களே! அதெப்படி உங்களுக்குத் தெரியும் என்ற கேள்வியைக் கேட்டேன்.

உங்களுக்கும் எனக்கும் பழக்கமே, நீங்கள் எழுதிய கட்டுரையின் மூலமாகத்தானே வந்தது. அந்த நினைவு இன்னும் என்னிடம் பசுமையாக இருக்கிாக கூnட்டுமா?