பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 97

விரும்புகின்றவர்களும், வியாபாரம் என்றால் வெறுத்துப் பேசுகிறார்கள். அந்தப் பக்கம் வரவே அரு வெறுப் பு அடைகிறார்கள். அஞ்சி மறைகின்றார்கள்.

நான் புத்தக வியாபாரம் செய்கிறேன் என்றதும், படித்திருக்கும் எனது விளையாட்டுத் துறை ஆட்கள், என்னை அலட்சியம் செய்தது இந்த ஒரு காரணத்தினால் தான். நான் படித்தவர்களின் மனோநிலையை புரிந்து வைத்துக் கொண்டிருந்ததால் பதட்டமடையவோ, குறுகிப்போகவோ இல்லை.

உன் கடைக்கு எதிரிலேயே ஒரு கடையை வாங்கிக் காட் டுகிறேன் என்று வாய் ச்சவடால் அடித்த நிலையில் அப்படிப்பேசிய என் வார்த்தையே என் வாழ்க்கை முறையாக அமைந்துவிட்டது.

ரெங்கநாதன் தெரு முழுவதும் கடைகள் உள்ளன. அவற்றில் ஒரு சில கடைகள் இரவு 11 மணி வரை இருக்கும். அதிகாலை 6 மணிக்கே மீண்டும் திறந்து விடும். அந்தத் தொழிலாளர்கள், 6ணி நேரம் கூட ஒய்வெடுப்பதில்லை 18 மணி நேரம் பணியாற்றுவதைப் பார்த்த பிறகு, எனக்கு அந்தக் காட்சி ஒரு உள் ஊக்கத்தை (இன்ஸ்பிரேஷன்) ஏற்படுத்திவிட்டது.

நானும் உழைக்கத் தயாரானேன். ஊர் சுற்றிப் புத்தக வியாபாரம் செய்கிற பொறுப்பை ஏற்றுக் கொண்டதால், வீட்டில் இருக்கும் நேரம், படிக்கவும் எழுதுகிற நேரம் வெளியில் என்றால் வியாபாரம் வேலை என்று வாழ்வை அமைத்துக் கொண்டேன்.

இப் படி இருக்கும் வேளையில்தான் ஒரு நாள் ஒரு ஆசிரியர் தஞ்சாவூரிலிருந்து என்னைப் பார்க்க வந்தார். கொஞ்ச நாள் சென்னையில் தங்கப் போகிறேன் என்று அறிமுகம் செய்து கொண்டார். அவர் என் புத்தகங்களைப் படித்துவிட்டு என்மேல்