பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

199

டாக்டர் எளில் நவராஜ் செல்லையா

திளைத்துப் போனேன். பல கற்பனைகள் கனவுகள் பட்டாம். பூச்சிளாய் பறந்தன.

ஸ்டுடியோகாரரிடம் போய் பணம் கொடுத்த போது 6000 ரூபாய் என்று பேசியவர்; பலர் வந்து அதிகமாகக் கேட்கிறார்கள். உங்களுக்காக 9000 ரூபாய்க்கு ஒத்துக் கொள்கிறேன் என்று பிடிவாதமாகிவிட்டார். கொடுத்தது போக, மீதி 3000த்தில் பல செலவுகள் என்ற திட்டத்தில், எல்லாமே பறிபோன நிலையில், எல்லா ரூபாய் களையும் அவரிடம் கொடுத்து, எதிர்பார்த்திருந்த இடத்தை வாங்கி விட்டேன்.

எனது வாழ்க்கையில் பேசிய வார்த்தைகளுக்காக, நான் பணத்தைப் பணம் என்று பார்க்கவில்லை. விளையாட்டுத்துறை நூல்கள் விற்பனை செய்கின்ற ஒரு இடத்தை வாங்கி விட்டோம் பணம் அதிகமாகப் போனாலும் கவலையில்லை. எனது இலட்சியம் நிறைவேறி விட்டது என்று மகிழ்ந்து போனேன், காசை இழந்தும் மகிழ்ச்சி கொண்டேன் என்றால், அது கொள்கையின் வெற்றிதானே!

இத்தனைக்கும் நான் கடையையே விலைக்கு வாங்கி விட்டேன் என்று நினைக்காதீர்கள் வாடகைக்கு ஒரு கடையைப் பிடித்து விட்டேன் என்பது தான். வாடகைக் கடைக்கு இப்படி மகிழ்ச்சியா என்றால் அதற்கெல்லாம் நான் விரும்பிய படி ராஜ் மோகன் பதிப்பகம் என்று பல வண்ண போர்டுகளை மாட்டிக் கொள்ளலாம் அல்லவா!

ரெங்கநாதன் தெருவில் விளையாட்டுத் துறை நூல்களை விற்க, ஒரு விற்பனை நிலையம் கிடைத்தது என்ற மகிழ்ச்சிக்குப் பிறகு, அந்தக் கடையில் எத்தனை எத்தனை அவஸ்தை படும் அனுபவங்கள் எனக்குக் கிடைத்தன தெரியுமா? அடுத்தப் பகுதிக்கு வாருங்கள்