பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

()

5

டாக்டர் எளில் நவராஜ் செல்லையா

28. தமிழில் விளையாட்டு இலக்கியம்

திமிழ்மொழி தோன்றிய காலம் தொட்டே, பல்வேறு

துறைகளில், பல்லாயிரக் கணக்கான இலக்கிய நூல்கள் புலவர் பெருமக்களால் எழுதப்பட்டன. இன்றும் தொடர்ந்து எழுதப்படுகின்றன. எதிர்காலத்திலும் ஏராளமான நூல்கள் தோன்ற இருக்கின்றன. தோன்றும்.

தமிழ்த்தாயின் இளைய மழலையாக, உருவானதுறைதான் விளையாட்டுத்துறை.

தமிழ் இலக்கிய நூல்களில் எல்லாம், வால் நட்சத்திரம் போல, ஆங்காங்கே ஒரிரு சொற்களில், ஒரிரு வரிகளில், ஒரிரு பக்கங்களில், விளையாட்டுக்கள் குறிக்கப்பட்டு இருக்கின்றன. விளக்கப்பட்டும் இருக்கின்றன.

ஆனால், ஒரு முழு இலக்கிய நூலாக இதுவரை எழுதப்படவில்லை. வாழ்க்கை அம்சங்களில் மட்டுமல்ல; இலக்கியங்களில் கூட விளையாட்டு, மின்னல் போல் தோன்றி மறை கிற ஒர் அற்புதமாகவே, அலங்காரமாகவே ஆச்சர்யமாகவே விளங்கி வந்திருக்கின்றன.

கவிதைத் துறை, கட்டுரைத் துறை, கதைத்துறை, நாடகத்துறை, போன்ற துறைகளில் எல்லாம், முழு நூல்