பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O7

டாக்டர் எளில் நவராஜ் செல்லையா

ஆக, விளையாட்டு பற்றி நூல் எழுத முயன்ற சிலருக்கு, தொடர்கின்ற சாதகமான சூழ்நிலை அமையாததற்கு, இன்னும் பல காரணங்கள் இருந்தன.

1. விளையாட்டுத்துறை என்றால், அதிலே பல தரப்பட்ட விளையாட்டுக்கள், நூற்றுக் கணக்கான எண்ணிக் கையில் இருக்கின்றன. அதாவது, காலால் உதைக் கின்ற விளையாட்டுக்கள்; கையால் அடித்தும் எறிந்தும், பிடித்தும், வீசி யும் ஆடுகின்ற விளையாட் டுக் கள்; விரல் களால் , கம் புகளால் , மட்டைகளால் , கோல் களால் ஆடுகின்ற விளையாட் டுக்கள்; தரைமீது 18 குழிகள் போட்டு, பல மைல்துாரம் நடந்து போய் ஆடுவதும்; ஒரு மேடை மீது பல குழிகளை வைத்து ஆடுவதும்; சுவற்றில் பந்தை மோதி வரச் செய்து விளையாடுவதும், ஒடுவதும் , தாண்டுவதும் , எறிவதும் போன்ற விளையாட்டுக்களை எல்லாம், ஒருவரே எழுதுவது என்பது கஷ்டமான காரியம்.

ஒருவர் ஒரு விளையாட்டில் வல்லுநராக இருப்பார். ஒரு சில விளையாட்டுக்கள் பற்றித் தெரிந்திருப்பார்.

தெரிந்த விளையாட்டுக்களைப் பற்றி, தீர்க்கமாக, தெளிவாக நூல் எழுத முடியாது என்பதால், ஒரிருவர், ஒன்றிரண்டு புத்தகங்களை எழுத முயன்றனர்.

ஆக, நிறைய நூல்களை ஒருவர் எழுத வேண்டும் என்றால், நிறைய விளையாட்டுக்களைப் பற்றி, நிறையவே தெரிந்தும், புரிந்தும், அறிந்தும், ஐயமற ஆடித் தெளிந்தும் இருந்தால்தான் வெற்றிகரமாக எழுத முடியும்.

2. நிறைய செய்திகள், குறிப்புகள் எடுத்துக் கொண்டாலும், அதைத் தமிழறிந்த வாசகர்கள் ஏற்றுக் கொள்ளும் வண்ணம், எழுதுகிற தமிழ் மொழிப் புலமை பெற்றிருக்க வேண்டும்.

வேண்டிய இடங்களில், தரமான, தன்மையான,