பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

209

டாக்டர் எளில் நவராஜ் செல்லையா

முக்த்தில் அடித்தால் போல, “இதெல்லாம் விலை போகாது, யார் வாங்குவார்கள்? யாராவது ஏறெடுத்துப் பார்த்தாலே அதுவே பெரிய வெற்றி ‘ என்று, எழுத்தாளர் மனதைப் புண் படுத்தி குத்திக் கிழித்துக் குதறி இனிமேல் புத்தகத்தையே எழுதக் கூடாது என்று முடிவுக்கு வருகிற ஒரு கட்டாய நிலைக்கு கொண்டு வந்து தள்ளி விடுவார்கள்.

இத்தனையும் மீறி நான் விளையாட்டுப் புத்தகங்களை எழுத ஆரம்பித்தேன் என்றால், அது தான் என்னிடம் இருந்த இலட்சிய வெறி. என்ன ஆனாலும் சரி, வாழ்க்கையில் எந்த நிலைக்குப் போனாலும் சரி, வாழ்ந்தாலும், வீழ்ந்தாலும் விளையாட்டுப் புத்தகம் எழுதியே ஆகவேண்டும் என்று என்னுள் எழுந்த ஆக்ரோஷ வெறி, புலிப் பாய்ச்சலாக அமைந்தது, புத்தகத்தை விற்கிற வேகமோ, புயலின் வேகமாக இருந்தது. இது எப்படி? என்று நீங்கள் கேட்கலாம்.

எப்பொழுதும், எழுத்தாளனுக்கு கர்வம் நிறைய உண்டு. தான் ஒரு படைப் பாளி என்ற தலைக் கனம் உண்டு. “அனைவரும் என்கருத்தினைப் படிக்கின்றனர் என்ற ஆணவ நினைவுகள் உண்டு. தன்னை ஒரு அதி மேதாவி என்று நினைத்துக் கொள்கிற தற்போதம் உண்டு. இது எழுத்தாளிகளுக்கே உரிய சிறப்பு குணங்களாகும். அப்படி அவர்கள் நினைத்துக் கொண்டால் தான் ஒரு துணிவோடு எழுத முடியும். தொடர்ந்து சிந்திக்க முடியும். தொட்டதை முடிக்க முடியும்.

ஆனால், விற்பனை என்று வரும் போது, எழுத்தாளர்கள் ஒதுங்கி விடுவார்கள். நேரிடையாக இறங்கி, எதிராளியின் உணர்வுகளிடையே உள்ள எழுச்சிகளை அறிந்து, முக பாவத்தை புரிந்து கொண்டு, தங்களுடைய நிலை அங்கே என்ன என்பதை தெரிந்து கொண்டு சூழ்நிலைக் கேற்ப தன்னைத் தாழ்த்திக் கொண்டு விற்க அவர்களால் முடிவதில்லை.

அதனால், நமது திறமை எவ்வளவு இருந்தாலும், அங்கே