பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 11

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

போனேன். வெந்தும் போனேன். அதற்காக என் விற்பனை முயற்சிகளை விட்டு விடவில்லை. இன்றும் தொடர்கின்றேன்.

என்னால் இந்த விளையாட்டுத் துறையில் இப்படி புதிய முயற்சிகளை எப்படித் தொடர முடிந்தது? இந்தப் பகுதி தொடக்கத்திலேயே, பலர் முயன்று பின்தங்கியதற்கு என்ன காரணம் என்பதையெல்லாம் தொகுத்து எழுதியிருந்தேன். சில கருத்துக்ளை குறித்தும் காட்டியிருந்தேன். அவற்றையெல்லாம், புரிந்து வைத்துக் கொண்டதால், அப்படிப்பட்ட தகுதிகளை நான் வளர்த்துக் கொண்டேன். இதற்கு என் ஆரம்ப கால கல்லூரி வாழ்க்கையும் அமைந்திருந்த விவரங்களையும், முன் பகுதியில் குறித் திருந்தேன். நாடகங்களாகவோ, நாவல்களாகவோ, சிறு கதைகளாகவோ எழுதி அனுபவப்பட்டு, எழுத்து உலகத்தில் என்னை முழுமையாக வளர்த்துக் கொண்டிருந்தேன்.

நான் ஒரு கருத்தை தொடங்கி அதை முடிக்கும் வரை, அதற்காகத் தொடர்ந்து கடுமையாக பாடுபடுவதும், அதை முடித்து விடவேண்டும் என்ற மனோபாவத்துடன் முயற்சிப்பதும், என் இலட்சியம் நிறைவேறுவதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

நான் நினைத்து ஒன்று நடக்கவில்லை என்றால், அதையே சுற்றிச் சுற்றி நினைத்து, சுற்றிச்சுற்றியே வந்து அந்த வேலையை முடித்து விடவேண்டும் என்று பாடுபடுவது எனது பழக்கம். அது வெற்றியா, தோல்வியா, என்பது பற்றி கவலை இல்லை. முயற்சிக்க வேண்டும், அதற்கு புது முடிவு தெரிய வேண்டும். அவ்வளவுதான்.

அதனால் என் புத்தகத்தை விற்று விடக்கூடிய சூழலை கொண்டு வந்து விடவேண்டும் என்று நான் முழுமையாக என்னை அர்ப்பணித்துக் கொண்டேன்.

என் புத்தகத்தை யாரும் பதிப்பிக்க முன் வரவில்லை என்ற காரணத்தினால் இங்கே ஒரு பதிப்பகத்தையே நான்