பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

னாலும் நிச்சயம் நிறைவேறி விடும் என்ற மொழி,

பொய்க்கவில்லை பார்த்தீர்களா என்றார்.

குழந்தைநாதன் அவர்களின் சரளமான பேச்சு, குற்றால அருவியாகக் கொட்டிக்கொண்டிருந்தது. புதுக்கோட்டை ரயில் நிலையம் வந்த பிறகு தான், எங்கள் பேச்சின் சுவாரஸ்யம் புரிந்தது.

மாலை சிற்றுண்டியை முடித்துக் கொண்டோம். ரயில் தன் பயணத்தை தொடங்கியது. நாங்களும் எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.

இந்த உடற்கல் வித் துறையில் ஈடுபடும் வாய்ப்பு உங்களுக்கு எப்படி ஏற்பட்டது என்று என்னைப் பற்றி தெரிந்து கொள்ள அவர் முயன்றார்.

இன்னும் ஒரு மணி நேரம் பயணம் செய்தாக வேண்டுமே! காரைக்குடி போகின்ற வரையில் பேச்சு தொடரும் என்று அவர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, நான் காரைக்குடிக்குப் படிக்கச் சென்ற முதல் திருப்பத்தைப் பற்றி, அவரிடம் பேச ஆரம்பித்தேன்.

1958 ம் ஆண்டு நான் பி.ஏ இறுதி வகுப்பு மாணவன். திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, கல்லூரிகளுக்கு இடையே ஒடுகளப் போட்டிகளை நடத்துகிற Gunn/Lisou, (INTER COLLEGIATE SPORTS) Pigp3, l'un கலைக்கல்லூரி ஏற்றிருந்தது.

அப்பொழுது சென்னை மாநிலத்திலுள்ள கல்லூரிகள் அனைத்தும், சென்னை டிவிஷன் மதுரை டிவிஷன் என்று இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன.

ஏறத்தாழ 30 கல்லூரிகளுக்கு மேல் பங்கேற்ற பெரிய போட்டிகள் அது. திருச்சி, தஞ்சை, ராமனாதபுரம், மதுரை,