பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

221

டாக்டர் எளில் நவராஜ் செல்லையா

29. சந்தர்ப்பங்களும் சம்பவங்களும்

ஏறத்தாழ 100 புத்தகங்களை எழுதி பதிப்பித்ததைத் தொடர்ந்து இன்னும் எழுதப்பட்டு அச்சுக்கு வராத பல கையெழுத்துப் பிரதிகளும் இன்னும் கைவசம் நிறைய உள்ளன.

அத்தனைத் தலைப்புக்களையும் நானாகவே யோசித்தேன் என்று கூறினால் அது பொய்.

நானாகவே யோசித்தது ஒரு கால் பகுதி; மீதியெல்லாம், சுற்றுப்புற சூழ்நிலையால் எழுதியே ஆக வேண்டும் என்று ஏற்பட்ட அனுபவங்கள்.

எழுத முடியாது என்று பலர் என்னிடம் வந்து சவால் விட்டதற்காக எழுதப்பட்டவைகள்.

இப்படி புத்தகங்களை எழுதினால் தான் எல்லோருக்கும் பயன் கிடைக்குமென்று எண்ணியே இரவு பகலாக சிந்தித்து எழுதப்பட்ட நூல்களும் பல.

ஆகையால், என்னை எழுதத் துண்டிய நிகழ்ச்சிகளே அதிகம். என்னை எழுத வைத்த சூழ்நிலைகளே அதிகம்.

கதை, கவிதை, நாடகங்கள், சிறுகதை என்று எழுத ஆரம்பித்த என்னை விளையாட்டுத் துறையில் ழுத்தாளராக