பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 222

ஆக்கியவர், எனது மதிப் பிற்குரிய, பெருமைக் குரிய பேராசிரியர் எஸ். குழந்தை நாதன் அவர்கள். நல்ல எழுத்தாளரும் ஆவார்.

முதல் புத்தகத்தை படித்துப் பார்த்து, உடற் கல்வித் துறையைச் சார்ந்த ஆசிரிய ஆசிரியைகள், பொதுமக்கள் பலர், இந்த விளையாட்டுக்களின் வரலாறும் வழிமுறைகளும் கூறும் புத்தகம், மிகவும் எளிமையாக இருக்கிறது. புரிந்து கொள்ளும் படியாக, பயன்படும் வகையில் அமைந்திருக்கிறது.

அதுபோலவே, ஆங்கிலத்தில் எழுதப் பட்டிருக்கின்ற விளையாட்டுக்களின் விதிகளை, தமிழிலே எழுதித்தாருங்கள் என்று விண்ணப்பித்த வேண்டுகோளை நிறைவேற்றுவதற்ாக எழுதிய நூலே விளையாட்டுக்களின் விதிகள் ஆகும்.

இனிமேல் எழுதத் தலைப் பே இல்லை என்று எனக்குள்ளே ஒருவித நிறைவு வந்து புகுந்து விட்டது. வேறு இல்லையே என்று விதந்து போய் வாழ்ந்த போதுதான் உடற் பயிற்சி பள்ளி ஒன்றைத் தொடங்கினேன் வருமானத்திற்காக.

வந்தவர்கள் கேட்ட சந்தேகங்களுக்கெல்லாம், பதில் கூறப் போய், அதுவே ஆழ் மனதிலும் ஆழப் பதிந்து, இந்த விடைகளையே நூலாக எழுதினால் என்ன என்று எண்ணச் செய்ததன் விளைவே, நீங்களும் உடலழகு பெறலாம் என்ற நூலை எழுத வைத்தது.

ஆண்களுக்கு மட்டும் உடற்பயிற்சி நூலா? பெண்களுக்கு ஏன் கூடாது என்று ஒரு சில பெண் அன்பர்கள் கேட்ட கேள்விக் குக் கிடைத்த நூல் தான் பெண்களும் பேரழகு பெறலாம் என்பதாகும்.

உடற்பயிற்சி பள்ளிக்கே வந்து, உடற்பயிற்சி செய்வதால் என்ன லாபம் செய்யாதவர்கள் என்ன சீரழிந்து விட்டார்கள்?