பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

223

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

செய்தவர்கள் என்ன சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறார்களா? என்று எகத்தாளம் பேசிய இரண்டும் கெட்டான் அன்பர்களுக்கு, புரிவதற்காக எழுதப்பட்ட நூல்தான் எதற்காக உடற் பயிற்சி செய்கிறோம் ?

இந்தக் காலக் கட்டத்திற்குள்ளே, தமிழில் விளையாட்டு உடற்பயிற்சிகள் வெளி வந்த விவரத்தைத் தெரிந்து கொண்ட பொதுமக்கள், நான் போகும் இடங்களிலும் எனது வீட்டிற்கு வருகிற போதும், அவரவர்கள் விரும்புகிற விளையாட்டைப் பற்றி தமிழில் எழுதினால், தமிழ்ச்சமுதாயத்திற்கே உதவியாக இருக்கும் என்று கோரிக்கை வைத்தனர்.

அந்த லட்சியத் தின் அடிப்படையில்தான் விளையாட்டுக்களின் வரிசை என்று தொடங்கி எழுதினேன்.

கால்பந்தாட் டம் , கைப்பந்தாட்டம், வளைகோல் பந்தாட்டம், பூப்பந்தாட்டம், மென்பந்தாட்டம், வளையப் பந்தாட்டம், கூடைப் பந்தாட்டம், கேரம் விளையாடுவது எப்படி?, சதுரங்கம் விளையாடுவது எப்படி?, சடுகுடு ஆட்டம் போன்ற நூல்கள் வெளிவந்தன.

விளையாட்டுக்களின் உண்மையான நோக்கம், நுண்மையான திறன்கள், மேன்மையான கொள்கைகளை எல்லாம் விளக்கினால் தானே மக்கள் புரிந்து கொள்வார்கள். மனம் விரும்பி பங்கு பெறுவார்கள் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாக, பல இலக்கிய நயம் நிறைந்த நூல்களை உருவாக்கினேன். விளையாட்டுகளுக்குப் பெயர் வந்தது எப்படி? விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்; விளையாட் டுச் சிந்தனைகள்; விளையாட் டு உலகம் ; விளையாட்டு அமுதம்.

மக்களுக்கு வாழ் வில் மகிழ்ச்சி நிறைய கிடைக்க வேண்டும், தொடர வண்டும் என்றால், நம்பிக்கையை