பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 224

ஊட்டுகின்ற மனோதத்துவ நூல்கள் தேவை என்று பலர் கொடுத்த அறிவுரையின் படி எழுதப்பட்ட நூல்களே நீங்களும் என்று தொடங்குகின்ற வரிசை

‘நீங்களும் உடலழகு பெறலாம் , நீங்களும் வலிமையோடு வாழலாம் , நீங்களும் நோயில் லாமல் வாழலாம், நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம், நீங்களும் இளமையோடு வாழலாம், நமக்கு நாமே உதவி, அவமானமா அஞ்சாதே!

மகிழ்ச்சி வேண்டும் என்றால் வலிமையான உடல் வேண்டும் என்பதற்காக, பயிற்சி செய்கிற விளக்க நூல்களை எழுதினேன். தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள், பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள், பேரின்பம் தரும் பிராணாயாமம் , பயன்தரும் யோகாசனப் பயிற்சிகள், குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும். -

இதற்கும் மேலே என்னுள் இருந்த இலக்கிய தாகமும் வேகமும், பல புதிய சிந்தனைகளை எழுப்பி விட்டன. வாழ்க் கைப் பந்தயம் , வள்ளுவரின் விளையாட் டுச் சிந்தனைகள், வானொலியில் விளையாட் டுக் கள், விளையாட் டுக்களின் கதைகள்'என்றெல்லாம் இலக்கியப் பணியைத் தொடர்ந்தேன்.

எல்லாம் தமிழில் கற்றுத்தர வேண்டும் என்பது தமிழக அரசின் தாரக மந்திரமாக விளங்குகிறது. ஒவ்வொரு துறையிலும் , மாணவர்களுக்குத் தமிழில் கற்றுத்தரும் பாடநூல்கள் எழுதப்பட வேண்டும் என்று அரசு ஒதுக்குகிற தொகை பல கோடிகள். அதற்காக அமைக்கப்பட்ட ஆசிரியர் குழுக்களும் அநேகம் இருந்தாலும், தேவை பூர்த்தி பெறவில்லை என்ற ஆதங்கம் தமிழ் விரும்பிகள் நெஞ்சம் எல்லாம் நிறையவே இருந்தது. இருக்கிறது.