பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 226

புதிது புதிதாக இப்போது ஏற்படுத்தப்படுகிற பாடத்திட்டங்களுக்கு ஏற்ப, எனது புத்தகம் எழுதுகிற முயற்சிகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

திருக்குறள் தோன்றிய காலந்தொட்டே, அதற்குரிய விரிவுரை எழுத விரும்பிய விவரமுள்ள உரை ஆசிரியர்கள், ஆயிரக்கணக்கான அறிஞர்கள், முயற்சிகளை மேற் கொண்டிருக்கின்றனர். இன்றும் பல புதிய உரையாசிரியர்கள் புறப்பட்டுக் கொண்டுதான் உள்ளனர்.

உடலியல் கருத்துக்களைத்தான், வள்ளுவர் தமது குறட்பாக்களில் வடித்துத் தந்திருக்கிறார்கள். வாழ்க்கை அமைப்புகளாகிய ஒழுக்கம், வழக்கு, தண்டனை முறைகளை, முப்பெரும் பகுதியாகப் பிரித்துப் பாடியிருக்கிறார்கள் எனும் புதிய நூலை எழுதி வெளியிட்டிருக்கிறேன். குறளுக்குப் புதிய பொருள் என்று பெயர் சூட்டியிருக்கிறேன்.

புதிய முயற்சியாக, விளையாட்டுத்துறை கலைச் சொல் களஞ்சியம், (Sports Dictionary) விளையாட்டுத் துறை 6,17Gossippsii. 3,60605, 3,676.5%uth (Encyclopedia of Sports and Games)

உடல், நோய், மருத்துவம் சார்ந்த ஆங்கிலம் தமிழ் -gj GJIT), (Physical & Medical Dictionary) GLI TGrp HTGggir எல்லாம் 1999ம் ஆண்டு வெளிவர இருக்கின்றன. தற்போது அச்சில்.

விளையாட்டுத்துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி என்னும் எனது நூலின் முதல் பாகம் தான் நிறைவு பெறுகிறது.

இரண்டாம் பாகம் தொடர்ந்து வர இருக்கிறது.

நான் வாழ்கிற காலம் வரை, எனது விளையாட்டுத் துறை