பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 21

திருநெல்வேலி போன்ற மாவட்டங்களிபள்ள கல்லூரிகள் அனைத்தும் இடம் பெற்ற போட்டிகளுக்கு, ஜமால் முகமது கல்லூரியின் சார்பாக நான் நீளம் தாண்டல், மும் முறைத் தாண்டல், உயரம் தாண்டல் போன்ற போட்டிகளில் பங்கு பெற்றேன்.

முதல் நாள் போட்டிகளில், நீளத்தாண்டும் போட்டியில் 21 அடிக்கு மேல் தாண்டி முதல் பரிசு பெற்றதுடன், புதிய சாதனையையும் நான் படைத்திருந்தேன். அதனால் மற்றவர்கள் பார்வையிலும், பேச்சிலும் என் பெயர் இடம் பெற்றுக் கொண்டது.

அடுத்த நாள் மும்முறைத்தாண்டும் போட்டி ( Hop Step & Jump) இடம் பெற்றபோது, அதில் முக்கிய திருப்பமும் நிகழ்ந்தது.

அழகப்பா கலைக் கல்லூரியிலிருந்து பங்கு பெறும் சிறந்த iரன் எல். சி. மகேந்திரன் என்பவர் தான், இந்தப் போட்டியில் முதலாவதாக வருவார். அவரை வெல்ல இந்த கல்லூரிகளுக்கிடையே யாரும் இல்லை. என்பதாகவும் பேசிக் கொண்டார்கள்.

அது மட்டுமல்லாமல், அந்த வீரன் படிக்கும் கல்லூரி தானே போட்டி நடத்துகிற கல்லூரியாக இருக்கிறது, அதனால் அந்த வீரனுக்குக் கிடைத்த மரியாதையும், உற்சாக வரவேற்பும் கொடி கட்டிப் பறந்தன.

இதற்கிடையிலே, என்னுடைய பெயரும் கலந்து கொண்டது. போட்டி ஆரம்பமாயிற்று. நிகழ்ச்சி வர்ணனையாளர், இந்த போட்டி பற்றியே அதிகமாக விமர்சித்துக் கொண்டிருந்தார்.

முதலில் மகேந்திரன் தாண்டினார். அவர் தாண்டியதுரம் 42 அடி பலர் தாண்டிய பிறகு என் முறை வந்தது. நான் வந்து