பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

தாண்டிய பிறகு அளந்த போது 44 அடி என்று காட்டியது. வர்ணனையாளரின் விமர்சனம் என் பெயரை விமரிசையாக வருணித்தது. பார்வையாளர்கள் இடையே பரபரப்பு.

மகேந்திரனுக்கு வேகமும் உற்சாகமும் ஊட்டக் கூடிய குரல்கள். மாணவர்கள் கூட்டத்திலிருந்து விண்ணதிர எழுந்தன. விடுவாரா அவர் அனுபவம் உள்ள வீரனாயிற்றே!

இரண்டாவது தாண்டும் வாய்ப்பில் அவர் தாண்டிய தூரம் 45 அடி 2 அங்குலம், அவரும் வெற்றிப் புன்னகையில் திளைத்தார்.

எனது இரண்டாவது வாய்ப்பு வந்தது. எனக்கும் பார்வையாளர்கள் பகுதியிலிருந்து உற்சாகமான கரகோஷம். என்னையறியாமல் நானும் தாண்டினேன். இதுவரைக்கும் நான் கற்பனை செய்து கூட பார்க்காத தூரம் 44 அடி 10 அங்குலம்.

இப்பொழுது எனக்குள்ளே போராட்டம். என்ன செய்வது? புதிய முயற்சி வெற்றி பெற்றால் புதிய சாதனை.

எந்த பரபரப்புக்கும் ஆளாகாத என் சுபாவம், இப்பொழுது அலைபாய ஆரம்பித்தது. நானும் ஒரு முடிவெடுத்துக் கொண்டேன்.

முயற்சித்துப் பார்ப்போமே! வந்தால் தேர்- வராவிட்டால் அறுந்து போவது வடக்கயிறுதானே.

மூன்றாவது முயற்சியில், நான் தாண்டுவதற்காக ஒடினேன். தாண்டும் பலகையில் இடது காலை வைத்து ஊன்றிய போது, என் கால்கள் வழுக்கி, மணற்பகுதியை நோக்கி தடுமாறி விழுந்து, உருண்டு போனேன்.

நல்ல அடி, மணற்பரப்பிலே மல்லாந்து கிடந்தேன். நல்ல

வேளை எனக்கு நினைவு தப் பிப் போய் விடவில்லை.