பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத்துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி - 23

விழித்துக்கிடந்தாலும், எழுந்திருக்க முடியவில்லை. தொடைத்தசை பிடித்துக் கொண்டது. (Muscle Pull). - என்னை ஒருவர் அப்படியே அள்ளி தம் கைகளில் தூக்கிக் கொண்டுபோய், படுக்கை ஒன்றில் கிடத்தி, தசைப் பிடிப்பு போக மசாஜ் செய்து கொண்டிருந்தார் பரவாயில்லை. கவலைப்படாதே! நீ விழுந்து விடாமல் தாண்டியிருப்பாய் உனது காலணியில் உள்ள ஆணி ஒன்று கழன்று போனதால்தான், நீ தவறி விழுந்து விட்டாய். கவலைப் படாதே என்று எனக்கு ஆறுதலும் தைரியமும் கூறிக் கொண்டேயிருந்தார்.

அவர் யாரென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். ராப்சன்.அழகப்பா உடற்கல்விக் கல்லூரி முதல்வர் என்றார். வணக்கம் செய்தேன்.

உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. வாழ்க! என்று என்னை வாழ்த்தி விட்டுச் சென்றார்.

உளளூர் வீரன் ஒருவனை வெல்லும் வாய்ப்பு எனக்குக் கை நழுவிப் போனாலும், பார்வையாளர்களிடையே என் பெயர் பரவிக் கொண்டது பற்றி எனக்கு மகிழ்ச்சி தான்.

அந்தப் போட்டியைப் பார்த்தவர்களில் நானும் ஒருவன் உங்களுக்கு அதிர்ஷடம் இல்லை என்று நான் என் நண்பர்களிடையே பேசியது. எனக்கு நினைவுக்கு வருகிறது என்றார் குழந்தைநாதன்.

அதிர்ஷ்டம் இல்லை என்றீர்களே? அது தான் இல்லை. என்னுடைய அதிர்ஷ்டம் தான். நான் அந்தப் போட்டியில் வெற்றி பெறாமல் விழுந்து கிடந்தது என்றேன்.

அதெப்படி என்றார்! என் வாழ்வில் ஏற்பட்ட முதல் திருப்பம் இதுதான். இந்தத் திருப்பம் தான், நான், இங்கே இன்றைக்கு இன்டர்வியூக்கு வர வாய்ப்பளித்தது என்றேன்.

எப்படி என்றார் குழந்தைநாதன் அவர்கள்! அவர் முகத்திலே ஆச்சரியம் விளையாடிக் கொண்டி ருந்தது.