பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 - டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

3. விழுந்ததும் எழுந்ததும்

தி ITண்டும் போது தவறி விழுந்ததற்கும், வாழ்வில் உயர்ந்ததற்கும் எப்படி பொருத்தம் இருக்கிறது. நீங்களோ அதை வாழ்வில் ஏற்பட்ட பெரிய திருப்பம் என்கிறீர்கள் என்று மீண்டும் குழந்தைநாதன் கேட்டார்.

காரைக் குடி டிவிஷன் போட்டியில் மகேந்திரனிடம் தோற்ற நான், மூன்று மாதம் கழித்து சென்னையில் நடைபெற்ற இன்டர் டிவிஷன் போட்டியில், மகேந்திரனை வென்று முதலிடம் பெற்றேன்.

காரைக்குடியில் மகேந்திரனை வெல்ல முடியாமற் போன நான், சென்னையில் ஜெயித்த செய்தி, டாக்டர் ராப்சனுக்குக் கிடைத்திருக்கிறது.

அந்த ஆண்டு டிப்ளமோ படிப்புக்கு, எனது நண்பர் டென்னிசன் அவர்கள் விண்ணப்பித்த போது, என்னையும் விண்ணப்பிக்குமாறு டென்னிசனிடம் சொல்லியிருந்தார்.

நானோ தமிழ் இலக்கியம் பயிலவேண்டும் என்ற தணியாத வேட்கை கொண்டவனாக இருந்தேன். கவிதை, நாடகம் என்றால், கல்லூரியில் நானில் லாமல் எந்த நிகழ்ச்சியும் இல்லை என்ற நிலையும் இருந்தது. அதனால், நான் சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரிக்கு மனு செய்திருந்தேன். சேர்வதும் நிச்சயமாகி இருந்தது.

அப்பொழுது பச்சையப்பன் கல்லூரி உடற்கல்வி