பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 31

4. அப்படி ஒர் ஆரம்பம்

அழகப்பா கலைக் கல்லூரியில் நேர்முகத் தேர்வு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் தான் தேர்வு நடத்தினார். நான் ஒருவன் தான் வந்திருந்தேன். மரபுப்படி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு என் பதில்களும் சரியாக அமைந்திருந்தன. கல்லூரி திறக்கும் நாளன்று வந்து பணியில் சேர்ந்து கொள்ளலாம் என்ற ஆணையுடன் என் நேர்முகத் தேர்வு நடந்தேறியது.

கல்லூரியிலிருந்து ஆர்டரைப் பெற்றுக் கொண்டேன். ஏப்ரல் மாதத்திற்கும் ஜூன் மாதத்திற்கும் இடையில் எனது திருமணம் நடந்தது. 1961 மே மாதம் 25ந் தேதி எனது திருமணம்.

இவ்வளவு விரைவாக ஏன் திருமணம் என்று எனது நண்பர்கள் அன்று கேட்டார்கள். வாசக அன்பர்கள் நீங்களும் கேட்கலாம் அல்லவா?

திருமணம் ஆகாத ஆசிரியர்களாக இருந்தால், கல்லூரி விடுதியில், துணை விடுதிக் காவலாளர் பணி அளிக்கப்படும். விடுதியிலே தங்கி மாணவர்களைக் காக்கும் பொறுப்பு.

அனுபவப்பட்ட ஆசிரியர்கள் எனக்கு முன் கூட்டியே தந்த தகவல். அதிலிருந்து விடுபட இன்னொரு முடிவை ஏற்றுக் கொண்டாக வேண்டும். அதுதான் திருமணம் செய்து