பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையர்

கொள்வது.

காரைக்குடியில் ஒட்டல் சாப்பாடு வசதிபோதாது. அந்த

சூழ்நிலையில் நான் விரும்பாத ஒன்றாக இருந்ததும் ஒரு காரணம்.

எனக்குள்ளே ஒரு சமாதானம். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு 23 வயதில் திருமணம் என்றால், அடுத்த ஆண்டே குழந்தை பிறந்தால், அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, எனக்கு 43 வயதாகும் போது, அந்தக் குழந்தை வளர்ந்து 20 வயதாகும். இரண்டு பேரும் சம்பாதிக்க நேர்ந்தால் குடும்பம் கொஞ்சம் வசதியாக வாழ முடியுமே!

இப்படியும் நான் எண்ணியதால் தான், கல்லூரிக்கு நான் பணியில் சேர வந்த போதே, திருமணமானவனாக வந்து சேர்ந்தேன்.

கல்லூரியில் எனக்கு வேலை இவ்வளவு சீக்கிரம், இவ்வளவு எளிதாக எப்படி கிடைத்தது என்ற தனது வியப்பை, வினாக்கள் மூலம் கணைகளைத் தொகுத்து, என்னைக் களைப் படையச் செய்தவர்களும் நிறைய பேர்கள் அப்பொழுதே இருந்தார்கள்.

காரணம் புரியாமல் தவித்த எனக்கு நாளாக நாளாக புரிய ஆரம்பித்தது.

ஒரு கல்லூரிக்கு ஒரு உடற்கல்வி இயக்குநர் தான் அனுமதி உண்டு. ஆனால் வள்ளல் அழகப்பர் வளர்த்த அந்தக் கல்லூரியில், ஒரு உடற் கல்வி இயக்குநர், ஒரு துணை இயக்குநர், ஒரு சிறப்பு இயக்குநர் (coach) என மூன்று பதவிகள் இருந்தன.

இயக்குநர் பதவியில் இருந்த திரு ராமதாஸ் அவர்கள்,