பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

என்பதைவிட, ஒரு வெறியே ஏற்பட்டு விட்டது.

என் பெயரை நவராஜ் செல்லையா என்று எழுதுவதைத் தவிர்த்து, நவராசு செல்லையா என்று, தமிழாக எழுதத் தொடங்கினேன். ஆங்கிலத்தில் பேசுவது அநாகரீகம். துரோகத்தனம், தாய்மொழி தமிழில் பேசுவதே தன்மானம் என்ற தமிழன்பர்கள் பேச்சிலே என்னை இழந்து, ஆங்கிலம் கலவாத தமிழில் பேசி வரலானேன்.

ஆங்கிலத்தில் அழகான கட்டுரை வரைகின்ற ஆற்றலை

பெற்றிருந்த நான், அதை இழந்ததுடன், நான்கு வார்த்தைகள் தொடர்ந்து ஆங்கிலத்தில் பேச முடியாத நிலைமைக்கும் ஆளானேன்.

நான் என். சி.சி ஆபிஸர் நேர்முகத் தேர்வுக்கு சென்னை வந்த போது, அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்காமல் போனதற்கு ஒரு காரணம், நான் சரியாக 4 நிமிடம் தொடர்ந்து ஆங்கிலத்தில் பேச இயலாமல் போனது தான்.

அவ்வாறு 1963 ல் என். சி. சி ஆபிஸர் பணி எனக்குக் கிடைக்காமற் போனதும் என் அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், அந்த என். சி.சி பணி கிடைத்திருந்தால், ஒரு வேளை நான், காரைக்குடி அழகப்பா கலைக் கல்லூரியிலேயே நிரந்தரமாகத் தங்கியிருந்திருப்பேன்.

நான் விளையாட்டுத் துறையில் நூல்கள் நிறைய எழுத வேண்டும் என்பது என் தலைவிதியாக இருந்தபோதும், அந்தப் பணி எனக்கு கிடைக்காதபடி அமைந்து விட்டது. கிடைக்கவில்லையே என்ற கலக்கம் அன்றைக்கு என்னை ஆட்டிப் படைத்து, அலைக்கழித்த நிலையை எண்ணி, இன்று எனக்குள் நானே சிரித்துக் கொள்கிறேன்.

இந்த நிகழ்ச்சியை இங்கே நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், விளையாட்டுத் துறை நூல்களை எழுதவேண்டும் என்ற ஒரு சூழ்நிலையை சுற்றிச் சுற்றியே, என் வாழ்க்கை