பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 37

நிகழ்ச்சிகள் எல்லாமே நடந்து வந்தன. என்பதைக்

குறிப்பிடத்தான்.

தமிழின் மீதிருந்த ஆர்வத்தால், என்னைத் தகுதி

படைத்தவனாக ஆக்கிக் கொள்ள முயன்றேன்.

கல்லூரியில் படித்த நாட்களில் விளையாட்டுப் போட்டிகள், விடுதிப் பொறுப்பு என்று பலவாறாக அலைந்து, பி.ஏ. தேர்வும் எழுதி, பிறகு டிப்ளமோ பட்டமும் உடற் கல்வியில் பெற்று, கல்லூரியிலும் வேலை வாங்கியாகிவிட்டது . கல்லூரி மாணவர்களுக்குத் தகுதியான ஆசிரியராக விளங்க வேண்டும் என்றால், நானும் நிறைய நூல்களைப்படித்தாக வேண்டுமே!

படிக்க வேண்டும் என்ற வெறி, என்னுள்ளே படமெடுத்து ஆடிக் கொண்டிருந்த போதுதான், முத்தமிழ் விழாக்களில், நான் சிறப்பான ஒரு பங்கினை வகிக்கும் நிலை ஏற்பட்டது.

ஒரங்க நாடகங்கள் எழுதி அதனை இயக்கிட நான் மேற்கொண்ட முயற்சிகளை, இப்பொழுது நினைத்தாலும் மலைப்பாக இருக்கிறது.

இப் படிப்பட்ட சூழ்நிலையில் கல்லூரி ஆண்டு மலர் தயாராகிறது. அதற்கான கதை, கட்டுரை, கவிதைகளை மாணவர்கள், ஆசிரியர்கள் வழங்கலாம் என்ற அறிவிப்பு ஒன்று வந்தது.

நானும் ஒரு கவிதையை எழுதிக் கொண்டுபோய், அப்பொழுது தமிழ்த்துறை தலைவராக இருந்த டாக்டர் வ.சுப மாணிக்கம் அவர்களிடம் கொடுத்தேன். என்னுடன் என் துறைத் தலைவர் திரு YS. டாட் அவர்களும் வந்திருந்தார்.

என் கவிதையை வாங்கிப் படித்த டாக்டர் என்னை ஒரு முறைப் பார்த்தார். அந்தப் பார்வையில் வியப்பும்,