பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

8

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

வினாக்குறிப்பும் தென்பட்டன.

மீண்டும் ஒருமுறை என் கவிதையைப் படித்தார். என்னை மீண்டும் ஒரு முறை பார்த்தார். நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தோம்.

தமிழ்த்துறைத் தலைவரிடமிருந்து இப்படி ஒரு வினா விரைந்து வந்தது.

இந்தக் கவிதையை உங்களுக்கு யார் எழுதி தந்தது? என்பது தான் அந்த வினா!

அதிர்ச்சிக்குள்ளானேன் நான். என்னை அவர் அவமானப்படுத்துகிறார் என்பதாக நான் நினைத்துக் கொண்டேன். மறுவார்த்தையாக அவரை பேசவிடவில்லை நான். இளம் ரத்தம் அல்லவா பொங்கியெழுந்தேன்.

கவிதை எழுதத் தெரியவில்லை என்றால் நான் கற்றுத் தருகிறேன். யார் எழுதிக் கொடுத்தது என்று எப்படி கேட்பீர்கள்? நமக்குள் ஒரு பந்தயம் வைத்துக் கொள்வோம்.